LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-49

2.049.சீகாழி 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
1993 பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் 
பாடி யாடிய வோசை நாடொறுங் 
கண்ணி னேரயலே 
பொலியுங் கடற்காழிப் 
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு 
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் 
அண்ண லாரடியார் 
அருளாலுங் குறைவிலரே.
2.049. 1
பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர். 
1994 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் 
மோதி மீதெறி சங்க வங்கமுங் 
கண்டலம் புடைசூழ் 
வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி 
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை 
விண்ட லங்கௌதாம் 
அதுநல் விதியாமே.
2.049. 2
நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும். 
1995 நாடெ லாமொளி யெய்த நல்லவர் 
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் 
காடெ லாமலர் 
தேன்துளிக்குங் கடற்காழித் 
தோடு லாவிய காது ளாய்சுரி 
சங்க வெண்குழை யானென் றென்றுன்னும் 
வேடங் கொண்டவர்கள் 
வினை நீங்கலுற்றாரே.
2.049. 3
நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர். 
1996 மையி னார்பொழில் சூழ நீழலில் 
வாச மார்மது மல்க நாடொறும் 
கையி னார்மலர் 
கொண்டெழுவார் கலிக்காழி 
ஐய னேயர னேயென் றாதரித் 
தோதி நீதியு ளேநி னைப்பவர் 
உய்யு மாறுலகில் 
உயர்ந்தாரி னுள்ளாரே.
2.049. 4
கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர் கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே ‘அரனே’ என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர். 
1997 மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் 
வந்து வந்தொளிர் நித்திலம் விழக் 
கலிக டிந்தகையார் 
மருவுங் கலிக்காழி 
வலிய காலனை வீட்டி மாணிதன் 
இன்னு யிரளித் தானை வாழ்த்திட 
மெலியுந் தீவினைநோய் 
அவைமேவுவார் வீடே.
2.049. 5
நிறைந்து விரைந்து வரும் வரும் அலைகளில் எதிர் வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலிய காலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும். 
1998 மற்று மிவ்வுல கத்து ளோர்களும் 
வானு ளோர்களும் வந்து வைகலுங் 
கற்ற சிந்தையராய்க் 
கருதுங் கலிக்காழி 
நெற்றி மேலமர் கண்ணி னானை 
நினைந்தி ருந்திசை பாடு வார்வினை 
செற்றமாந் தரெனத் 
தௌமின்கள் சிந்தையுளே.
2.049. 6
இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைக் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தௌவீர்களாக. 
1999 தான லம்புரை வேதிய ரொடு 
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் 
கானலின் விரைசேர 
விம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற 
வாகி நின்றவொ ருவனே யென்றென் 
றானலங் கொடுப்பார் 
அருள்வேந்த ராவாரே.
2.049.7
நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப் பதியுள் ஊனுடம்புடையோர் உயிர் வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்ததினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர். 
2000 மைத்த வண்டெழு சோலை யாலைகள் 
சாலி சேர்வய லார வைகலுங் 
கத்து வார்கடல் சென் 
றுலவுங் கலிக்காழி 
அத்த னேயர னேய ரக்கனை 
யன்ற டர்த்துகந் தாயு னகழல் 
பத்தராய்ப் பரவும் 
பயனீங்கு நல்காயே.
2.049. 8
வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக. 
2001 பரும ராமொடு தெங்கு பைங்கத 
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் 
கருவரா லுகளும் 
வயல்சூழ் கலிக்காழித் 
திருவி னாயக னாய மாலொடு 
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய 
இருவர் காண்பரியா 
னெனவேத்துத லின்பமே.
2.049. 9
பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும். 
2002 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி 
யாது வண்டுகி லாடை போர்த்தவர் 
கண்டு சேரகிலார் 
அழகார் கலிக்காழித் 
தொண்டை வாயுமை யோடு கூடிய 
வேட னேசுட லைப்பொ டியணி 
அண்டவா ணனென்பார்க் 
கடையா வல்லல்தானே.
2.049. 10
சோற்றுத் திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். “அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே” என்பாரை அல்லல்கள் அடையா. 
2003 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு 
முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் 
கயலுலாம் வயல்சூழ்ந் 
தழகார் கலிக்காழி 
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய 
ஞான சம்பந்தன் செந்த மிழுரை 
உயருமா மொழிவார் 
உலகத் துயர்ந்தாரே.
2.049. 11
பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.049.சீகாழி 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

1993 பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங் கண்ணி னேரயலே பொலியுங் கடற்காழிப் பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.2.049. 1
பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர். 

1994 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமுங் கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழிவண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை விண்ட லங்கௌதாம் அதுநல் விதியாமே.2.049. 2
நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும். 

1995 நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித் தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யானென் றென்றுன்னும் வேடங் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே.2.049. 3
நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர். 

1996 மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறும் கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர் உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.2.049. 4
கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர் கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே ‘அரனே’ என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர். 

1997 மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக் கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட மெலியுந் தீவினைநோய் அவைமேவுவார் வீடே.2.049. 5
நிறைந்து விரைந்து வரும் வரும் அலைகளில் எதிர் வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலிய காலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும். 

1998 மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி நெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடு வார்வினை செற்றமாந் தரெனத் தௌமின்கள் சிந்தையுளே.2.049. 6
இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைக் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தௌவீர்களாக. 

1999 தான லம்புரை வேதிய ரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் கானலின் விரைசேர விம்முங் கலிக்காழிஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென் றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.2.049.7
நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப் பதியுள் ஊனுடம்புடையோர் உயிர் வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்ததினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர். 

2000 மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் கத்து வார்கடல் சென் றுலவுங் கலிக்காழி அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல் பத்தராய்ப் பரவும் பயனீங்கு நல்காயே.2.049. 8
வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக. 

2001 பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித் திருவி னாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.2.049. 9
பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும். 

2002 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் கண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித் தொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணி அண்டவா ணனென்பார்க் கடையா வல்லல்தானே.2.049. 10
சோற்றுத் திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். “அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே” என்பாரை அல்லல்கள் அடையா. 

2003 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரை உயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே.2.049. 11
பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.