LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-28

3.028.திருமழபாடி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர். 
தேவியார் - அழகாம்பிகையம்மை. 
3096 காலையார் வண்டினங் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே 3.028.1
காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும், பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3097 கறையணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே 3.028.2
நீலகண்டராயும், நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 
3098 அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே 3.028.3
அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிறவேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன், இறைவன், பந்து வந்தடைகின்ற மென்மையான விரல்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 
3099 அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் 
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே 3.028.4
யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன். வீடுபேறாயும், மும்மூர்த்திகட்கு முதல்வனாயும் விளங்குபவன். பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன், அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 
3100 கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே 3.028.5
கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான். கொடிய கண்ணையுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன். வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன். தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3101 பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே 3.028.6
பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3102 விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே 3.028.7
சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர். நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3103 கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன
சிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே 3.028.8
தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பேருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர். பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட, அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3104 ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே 3.028.9
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அடிமுடி தேட, காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3105 உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே 3.028.10
நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா. படமெடுத்தாடும், புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து, இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் விற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 
3106 ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே 3.028.11
இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை, உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

3.028.திருமழபாடி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர். தேவியார் - அழகாம்பிகையம்மை. 

3096 காலையார் வண்டினங் கிண்டிய காருறும்சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவேவேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்மாலையார் மதிதவழ் மாமழ பாடியே 3.028.1
காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும், பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3097 கறையணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணியபிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர்துறையணி குருகினம் தூமலர் துதையவேமறையணி நாவினான் மாமழ பாடியே 3.028.2
நீலகண்டராயும், நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 

3098 அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே 3.028.3
அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிறவேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன், இறைவன், பந்து வந்தடைகின்ற மென்மையான விரல்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 

3099 அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே 3.028.4
யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன். வீடுபேறாயும், மும்மூர்த்திகட்கு முதல்வனாயும் விளங்குபவன். பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன், அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும். 

3100 கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்செங்கயற் கண்உமை யாளொடுஞ் சேர்விடம்மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே 3.028.5
கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான். கொடிய கண்ணையுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன். வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன். தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3101 பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்மாலினார் வழிபடும் மாமழ பாடியே 3.028.6
பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3102 விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவேஎண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே 3.028.7
சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர். நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.

3103 கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கனசிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனாஇரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே 3.028.8
தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பேருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர். பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட, அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3104 ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே 3.028.9
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அடிமுடி தேட, காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3105 உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்மறிபிடித் தானிடம் மாமழ பாடியே 3.028.10
நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா. படமெடுத்தாடும், புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து, இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் விற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும். 

3106 ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்சீலத்தான் மேவிய திருமழ பாடியைஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே 3.028.11
இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை, உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.