LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-29

3.039.திருஆலவாய் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. 
தேவியார் - மீனாட்சியம்மை. 
இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள் எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது; சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக் குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.
3211 மானினேர்விழி மாதராய்வழு 
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ
னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கௌ யேனலேன்திரு
வாலவாயர னிற்கவே
3.039.1
மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். "பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன்" என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன். 
3212 ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கௌ யேனலேன்திரு
வாலவாயர னிற்கவே
3.039.2
வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்குமேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன்துணை நிற்பதால் . 
3213 அத்தகுபொரு ளுண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி
லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.3
கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது, இல்லை என்றும் சொல்லமுடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப்படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு, நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன். 
3214 சந்துசேனனு மிந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.4
சந்தசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார். 
3215 கூட்டினார்கி ளியின்விருத்த
முரைத்ததோரொலி யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு
மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.5
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர் கட்கும் யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்றும் நின்று அருள்புரிவார். 
3216 கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனும்
சினகருக்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.6
கனகநந்தி, புட்நந்தி, பவணநந்தி, குமண மாசுனகநந்தி, குனகநந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்னுள் நிற்பதால். 
3217 பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கௌ யேனலேன்றிரு
வாலவாயரனிற்கவே
3.039.7
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறிநின்று, ஆருகதசமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும் துணை நிற்றலால், யான் எளியவன் அல்லேன். 
3218 மேலெனக்கெதி ரில்லையென்ற
வரக்கனார் மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.8
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவன்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான், திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன். 
3219 பூமகற்கு மரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போறலை
யைப்பறித்தொரு பொய்த்தவம் 
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.9
பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி, பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால். 
3220 தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கௌ யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே
3.039.10
சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன். 
3221 எக்கராமமண் கையருக்கௌ
யேனலேன்றிரு வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து
முரைப்பவர்க்கிட ரில்லையே
3.039.11
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

3.039.திருஆலவாய் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. தேவியார் - மீனாட்சியம்மை. 
இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள் எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது; சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக் குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.

3211 மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்பானல்வாயொரு பாலனீங்கிவனென்றுநீபரி வெய்திடேல்ஆனைமாமலை யாதியாயஇடங்களிற்பல அல்லல்சேர்ஈனர்கட்கௌ யேனலேன்திருவாலவாயர னிற்கவே3.039.1
மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். "பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன்" என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன். 

3212 ஆகமத்தொடு மந்திரங்களமைந்தசங்கத பங்கமாப்பாகதத்தொ டிரைத்துரைத்தசனங்கள்வெட்குறு பக்கமாமாகதக்கரி போற்றிரிந்துபுரிந்துநின்றுணும் மாசுசேர்ஆகதர்க்கௌ யேனலேன்திருவாலவாயர னிற்கவே3.039.2
வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்குமேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன்துணை நிற்பதால் . 

3213 அத்தகுபொரு ளுண்டுமில்லையுமென்றுநின்றவர்க் கச்சமாஒத்தொவ்வாமை மொழிந்துவாதிலழிந்தெழுந்த கவிப்பெயர்ச்சத்திரத்தின் மடிந்தொடிந்துசனங்கள் வெட்குற நக்கமேசித்திரர்க்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.3
கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது, இல்லை என்றும் சொல்லமுடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப்படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு, நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன். 

3214 சந்துசேனனு மிந்துசேனனுந்தருமசேனனுங் கருமைசேர்கந்துசேனனுங் கனகசேனனுமுதலதாகிய பெயர்கொளாமந்திபோற்றிரிந் தாரியத்தொடுசெந்தமிழ்ப்பய னறிகிலாஅந்தகர்க்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.4
சந்தசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார். 

3215 கூட்டினார்கி ளியின்விருத்தமுரைத்ததோரொலி யின்றொழிற்பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலுமெக்கர்தங்களைப் பல்லறம்காட்டியேவரு மாடெலாங்கவர்கையரைக்கசி வொன்றிலாச்சேட்டைகட்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.5
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர் கட்கும் யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்றும் நின்று அருள்புரிவார். 

3216 கனகநந்தியும் புட்பநந்தியும்பவணநந்தியுங் குமணமாசுனகநந்தியுங் குனகநந்தியுந்திவணநந்தியு மொழிகொளாஅனகநந்தியர் மதுவொழிந்தவமேதவம்புரி வோமெனும்சினகருக்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.6
கனகநந்தி, புட்நந்தி, பவணநந்தி, குமண மாசுனகநந்தி, குனகநந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்னுள் நிற்பதால். 

3217 பந்தணம்மவை யொன்றிலம்பரிவொன்றிலம்மென வாசகமந்தணம்பல பேசிமாசறுசீர்மையின்றிய நாயமேஅந்தணம்மரு கந்தணம்மதுபுத்தணம்மது சித்தணச்சிந்தணர்க்கௌ யேனலேன்றிருவாலவாயரனிற்கவே3.039.7
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறிநின்று, ஆருகதசமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும் துணை நிற்றலால், யான் எளியவன் அல்லேன். 

3218 மேலெனக்கெதி ரில்லையென்றவரக்கனார் மிகை செற்றதீப்போலியைப்பணி யக்கிலாதொருபொய்த்தவங்கொடு குண்டிகைபீலிகைக்கொடு பாயிடுக்கிநடுக்கியேபிறர் பின்செலும்சீலிகட்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.8
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவன்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான், திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன். 

3219 பூமகற்கு மரிக்குமோர்வருபுண்ணியன்னடி போற்றிலார்சாமவத்தையி னார்கள்போறலையைப்பறித்தொரு பொய்த்தவம் வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடியட்டிவாய்சக திக்குநேர்ஆமவர்க்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.9
பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி, பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால். 

3220 தங்களுக்குமச் சாக்கியர்க்குந்தரிப்பொணாதநற் சேவடிஎங்கணாயக னேத்தொழிந்திடுக்கேமடுத்தொரு பொய்த்தவம்பொங்குநூல்வழி யன்றியேபுலவோர்களைப்பழிக் கும்பொலாஅங்கதர்க்கௌ யேனலேன்றிருவாலவாயர னிற்கவே3.039.10
சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன். 

3221 எக்கராமமண் கையருக்கௌயேனலேன்றிரு வாலவாய்ச்சொக்கனென்னு ளிருக்கவேதுளங்கும்முடித்தென்னன் முன்னிவைதக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ்நாதன்ஞானசம் பந்தன்வாய்ஒக்கவேயுரை செய்தபத்துமுரைப்பவர்க்கிட ரில்லையே3.039.11
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.