LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-110

4.110.திருத்தூங்கானைமாடம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
1028 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்
போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங்
கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி
மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்
சுடர்க்கொழுந்தே.
4.110.1
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கானை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப்பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
1029 ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென்
றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி
காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந்
தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம்
புண்ணியனே 
4.110.2
செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! 'ஐயோ' இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்ற திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப்பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
1030 கடவுந் திகிரி கடவா தொழியக்
கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி
மால்வரைபோல்
இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ்
சோலைதிங்கள்
கடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந்
தத்துவனே.
4.110.10
பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக்கொள்வாயாக.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.