LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-30

3.030.திருஅரதைப்பெரும்பாழி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பரதேசுவரர். 
தேவியார் - அலங்காரநாயகியம்மை. 
3118 பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.1
இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும். 
3119 கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.2
கயல்மீன் போன்றும், சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர் சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும், அடியவர்களும் எண்ணுதற்கு அரிய. பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 
3120 கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.3
அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 
3121 மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.4
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப்பொருளாகியவர். பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே. 
3122 மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் 
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.5
சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர், மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில் மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர். சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே. 
3123 புற்றர வம்புலித் தோலரைக் கோவணம்
தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.6
புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் இடையில் அணிந்து, இரவில் நடனமாடும் சிவபெருமான், பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 
3124 துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி
கணையினான் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.7
அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும், திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர், ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும், அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும், கையினில் இளமான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திரு அரதைப் பெரும்பாழியே ஆகும். 
3125 சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.8
தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரியதோள்களும், தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந் தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே. 
3126 வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
ப எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.9
வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர். கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமையுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 
3127 நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.10
சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே. 
3128 நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே 3.030.11
கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

3.030.திருஅரதைப்பெரும்பாழி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பரதேசுவரர். தேவியார் - அலங்காரநாயகியம்மை. 

3118 பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.1
இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும். 

3119 கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.2
கயல்மீன் போன்றும், சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர் சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும், அடியவர்களும் எண்ணுதற்கு அரிய. பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 

3120 கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடைஆடல்சா லவ்வுடை யாரழ காகியபீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.3
அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 

3121 மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.4
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப்பொருளாகியவர். பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே. 

3122 மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.5
சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர், மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில் மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர். சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே. 

3123 புற்றர வம்புலித் தோலரைக் கோவணம்தற்றிர வின்னட மாடுவர் தாழ்தருசுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.6
புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் இடையில் அணிந்து, இரவில் நடனமாடும் சிவபெருமான், பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 

3124 துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடிஇணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரிகணையினான் முப்புரம் செற்றவர் கையினில்பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.7
அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும், திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர், ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும், அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும், கையினில் இளமான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திரு அரதைப் பெரும்பாழியே ஆகும். 

3125 சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலைநெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.8
தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரியதோள்களும், தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந் தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே. 

3126 வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்ப எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்கரியமா லோடயன் காண்பரி தாகியபெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.9
வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர். கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமையுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே. 

3127 நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே 3.030.10
சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே. 

3128 நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே 3.030.11
கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.