LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-51

2.051.திருக்களர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர். 
தேவியார் - அழகேசுவரியம்மை. 
2015 நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில் 
நீண்ட மாவய லீண்டு மாமதில் 
தேரினார் மறுகில் 
விழாமல்கு திருக்களருள் 
ஊரு ளாரிடு பிச்சை பேணும் 
ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி 
ஆரநின் றவனே 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 1
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக. 
2016 தோளின் மேலொளி நீறு தாங்கிய 
தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய 
தாளினார் வளருந் 
தவமல்கு திருக்களருள் 
வேளி னேர்விச யற்க ருள்புரி 
வித்த காவிரும் பும்ம டியாரை 
ஆளுகந் தவனே 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 2
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக. 
2017 பாட வல்லநன் மைந்த ரோடு 
பனிம லர்பல கொண்டு போற்றிசெய் 
சேடர்வாழ் பொழில்சூழ் 
செழுமாடத் திருக்களருள் 
நீட வல்ல நிமல னேயடி 
நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம் 
ஆடவல் லவனே 
அடைந்தார்க் கருளாயே
2.051. 3
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட வீடுகளைக்கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக. 
2018 அம்பி னேர்தடங் கண்ணி னாருடன் 
ஆட வர்பயில் மாட மாளிகை 
செம்பொ னார் பொழில் 
சூழ்ந்தழகாய திருக்களருள் 
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா 
விணையடி போற்றி நின்றவர்க் 
கன்பு செய்தவனே 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 4
வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக. 
2019 கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் 
கெண்டி மாமது வுண்டி சைசெயத் 
தெங்கு பைங்கமுகம் 
புடைசூழ்ந்த திருக்களருள் 
மங்கை தன்னொடுங் கூடிய மண 
வாள னேபிணை கொண்டொர் கைத்தலத் 
தங்கை யிற்படையாய் 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 5
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக. 
2020 கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் 
சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச் 
சேலிளங் கயலார் 
புனல்சூழ்ந்த திருக்களருள் 
நீலம் மேவிய கண்ட னேநிமிர் 
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி 
ஆல நீழலுளார் 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 6
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2021 தம்ப லம்மறி யாத வர்மதில் 
தாங்கு மால்வரை யாலழ லெழத் 
திண்பலங் கெடுத்தாய் 
திகழ்கின்ற திருக்களருள் 
வம்ப லர்மலர் தூவி நின்னடி 
வானவர் தொழக் கூத்து கந்துபேர் 
அம்பலத் துறைவாய் 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 7
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப்பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2022 குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி 
மாட நீடுயர் கோபு ரங்கண் மேல் 
சென்ற டுத்துயர்வான் 
மதிதோயுந் திருக்களருள் 
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் 
தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி 
அன்றடர்த் துகந்தாய் 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 8
மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2023 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் 
பாட லாடலொ டார வாழ்பதி 
தெண்ணி லாமதியம் 
பொழில்சேருந் திருக்களருள் 
உண்ணி லாவிய வொருவ னேயிரு 
வர்க்கு நின்கழல் காட்சி யாரழல் 
அண்ண லாயவெம்மான் 
அடைந்தார்க் கருளாயே.
2.051. 9
யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தௌந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக. 
2024 பாக்கி யம்பல செய்த பத்தர்கள் 
பாட்டொ டும்பல பணிகள் பேணிய 
தீக்கியல் குணத்தார் 
சிறந்தாருந் திருக்களருள் 
வாக்கின் நான்மறை யோதி னாயமண் 
தேரர் சொல்லிய சொற்க ளானபொய் 
ஆக்கி நின்றவனே 
யடைந்தார்க் கருளாயே.
2.051. 10
நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2025 இந்து வந்தெழு மாட வீதியெ 
ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன் 
செந்து நேர்மொழியார் 
அவர்சேருந் திருக்களருள் 
அந்தி யன்னதொர் மேனி யானை 
அமரர் தம்பெரு மானை ஞானசம் 
பந்தன் சொல்லிவை 
பத்தும்பாடத் தவமாமே.
2.051. 11
திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத் தவம் சித்திக்கும். 
திருச்சிற்றம்பலம்

2.051.திருக்களர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர். தேவியார் - அழகேசுவரியம்மை. 

2015 நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில் தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள் ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.2.051. 1
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக. 

2016 தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள் வேளி னேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.2.051. 2
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக. 

2017 பாட வல்லநன் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய் சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள் நீட வல்ல நிமல னேயடி நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம் ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே2.051. 3
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட வீடுகளைக்கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக. 

2018 அம்பி னேர்தடங் கண்ணி னாருடன் ஆட வர்பயில் மாட மாளிகை செம்பொ னார் பொழில் சூழ்ந்தழகாய திருக்களருள் என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா விணையடி போற்றி நின்றவர்க் கன்பு செய்தவனே அடைந்தார்க் கருளாயே.2.051. 4
வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக. 

2019 கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கெண்டி மாமது வுண்டி சைசெயத் தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள் மங்கை தன்னொடுங் கூடிய மண வாள னேபிணை கொண்டொர் கைத்தலத் தங்கை யிற்படையாய் அடைந்தார்க் கருளாயே.2.051. 5
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக. 

2020 கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச் சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள் நீலம் மேவிய கண்ட னேநிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி ஆல நீழலுளார் அடைந்தார்க் கருளாயே.2.051. 6
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2021 தம்ப லம்மறி யாத வர்மதில் தாங்கு மால்வரை யாலழ லெழத் திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள் வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபேர் அம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.2.051. 7
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப்பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2022 குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி மாட நீடுயர் கோபு ரங்கண் மேல் சென்ற டுத்துயர்வான் மதிதோயுந் திருக்களருள் நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.2.051. 8
மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2023 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி தெண்ணி லாமதியம் பொழில்சேருந் திருக்களருள் உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல் அண்ண லாயவெம்மான் அடைந்தார்க் கருளாயே.2.051. 9
யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தௌந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக. 

2024 பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே யடைந்தார்க் கருளாயே.2.051. 10
நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2025 இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன் செந்து நேர்மொழியார் அவர்சேருந் திருக்களருள் அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம் பந்தன் சொல்லிவை பத்தும்பாடத் தவமாமே.2.051. 11
திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத் தவம் சித்திக்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.