LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-52

2.052.திருக்கோட்டாறு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர். 
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 
2026 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை 
செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற் 
குருந்த மாதவியின் 
விரைமல்கு கோட்டாற்றில் 
இருந்த எம்பெரு மானை யுள்கி 
இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள் 
வருந்து மாறறியார் 
நெறிசேர்வர் வானூடே.
2.052. 1
கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண்வழியாக வீட்டுநெறியை எய்துவர். 
2027 நின்று மேய்ந்து நினைந்து மாகரி 
நீரொ டும்மலர் வேண்டி வான்மழை 
குன்றி னேர்ந்துகுத்திப் 
பணிசெய்யுங் கோட்டாற்றுள் 
என்றும் மன்னிய எம்பி ரான்கழல் 
ஏத்தி வானர சாள வல்லவர் 
பொன்று மாறறியார் 
புகழார்ந்த புண்ணியரே.
2.052.2
பெரிய யானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக் குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார். 
2028 விரவி நாளும் விழா விடைப்பொலி 
தொண்டர் வந்து வியந்து பண்செயக் 
குரவ மாரு 
நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில் 
அரவ நீள்சடை யானை யுள்கிநின் 
றாத ரித்துமுன் அன்பு செய்தடி 
பரவு மாறுவல் 
லார்பழிபற் றறுப்பாரே.
2.052. 3
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர். 
2029 அம்பி னேர்விழி மங்கை மார்பலர் 
ஆட கம்பெறு மாட மாளிகைக் 
கொம்பி னேர்துகி 
லின்கொடியாடு கோட்டாற்றில் 
நம் பனேநட னேந லந்திகழ் 
நாதனே யென்று காதல் செய்தவர் 
தம்பி னேர்ந்தறி 
யார்தடுமாற் றவல்வினையே.
2.052. 4
அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக்கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார். 
2030 பழைய தம்மடி யார்து திசெயப் 
பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் 
குழலு மொந்தை 
விழாவொலி செய்யுங்கோட்டாற்றில் 
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் 
கானி டைக்கண மேத்த வாடிய 
அழக னென்றெழுவார் 
அணியாவர் வானவர்க்கே.
2.052. 5
பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர். 
2031 பஞ்சின் மெல்லடி மாத ராடவர் 
பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் 
கொஞ்சி யின்மொழியால் 
தொழின்மல்கு கோட்டாற்றில் 
மஞ்ச னேமணி யேம ணிமிடற் 
றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர் 
துஞ்சு மாறறியார் 
பிறவாரித் தொன்னிலத்தே.
2.052. 6
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே ! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர். 
2032 கலவ மாமயி லாளொர் பங்கனைக் 
கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை 
குலவு மாறுவல்லார் 
குடிகொண்ட கோட்டாற்றில் 
நிலவு மாமதி சேர்ச டையுடை 
நின்ம லாவென வுன்னு வாரவர் 
உலவு வானவரின் 
உயர்வாகுவ துண்மையதே.
2.052.7
தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில வொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை. 
2033 வண்ட லார்வயற் சாலி யாலைவ 
ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை 
கொண்ட லார்கொணர்ந் 
தங்குலவுந்திகழ் கோட்டாற்றில் 
தொண்டெ லாந்து திசெய்ய நின்ற 
தொழில னேகழ லால ரக்கனை 
மிண்டெ லாந்தவிர்த் 
தென்னுகந்திட்ட வெற்றிமையே.
2.052. 8
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும்பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ? 
2034 கருதி வந்தடி யார்தொ ழுதெழக் 
கண்ண னோடயன் றேடவானையின் 
குருதி மெய்கலப்ப 
உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாது நீயும்வி 
யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள் 
எருதுகந் தவனே 
யிரங்காயுன தின்னருளே.
2.052. 9
அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக. 
2035 உடையி லாதுழல் கின்ற குண்டரும் 
ஊண ருந்தவத் தாய சாக்கியர் 
கொடையி லாமனத்தார் 
குறையாருங் கோட்டாற்றில் 
படையி லார்மழு வேந்தி யாடிய 
பண்ப னேயிவ ரென்கொ லோநுனை 
அடைகி லாதவண்ணம் 
அருளாயுன் னடியவர்க்கே.
2.052. 10
உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக. 
2036 கால னைக்கழ லாலு தைத்தொரு 
காம னைக்கன லாகச் சீறிமெய் 
கோல வார்குழலாள் 
குடிகொண்ட கோட்டாற்றில் 
மூல னைமுடி வொன்றி லாதவெம் 
முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய 
மாலை பத்தும்வல்லார்க் 
கௌதாகும் வானகமே.
2.052. 11
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும். 
திருச்சிற்றம்பலம்

2.052.திருக்கோட்டாறு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 

2026 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற் குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெரு மானை யுள்கி இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள் வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.2.052. 1
கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண்வழியாக வீட்டுநெறியை எய்துவர். 

2027 நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை குன்றி னேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர் பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.2.052.2
பெரிய யானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக் குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார். 

2028 விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக் குரவ மாரு நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில் அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி பரவு மாறுவல் லார்பழிபற் றறுப்பாரே.2.052. 3
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர். 

2029 அம்பி னேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக் கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில் நம் பனேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர் தம்பி னேர்ந்தறி யார்தடுமாற் றவல்வினையே.2.052. 4
அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக்கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார். 

2030 பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் குழலு மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில் கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த வாடிய அழக னென்றெழுவார் அணியாவர் வானவர்க்கே.2.052. 5
பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர். 

2031 பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சி யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில் மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர் துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.2.052. 6
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே ! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர். 

2032 கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர் உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.2.052.7
தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில வொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை. 

2033 வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில் தொண்டெ லாந்து திசெய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.2.052. 8
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும்பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ? 

2034 கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் றேடவானையின் குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்விருதி னான்மட மாது நீயும்வி யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள் எருதுகந் தவனே யிரங்காயுன தின்னருளே.2.052. 9
அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக. 

2035 உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர் கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில் படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.2.052. 10
உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக. 

2036 கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய் கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் மூல னைமுடி வொன்றி லாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய மாலை பத்தும்வல்லார்க் கௌதாகும் வானகமே.2.052. 11
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.