|
||||||||
தேங்காய்ப்பால் மிளகாய் கறி(coconut milagaikari ) |
||||||||
தேவையானவை: கெட்டியான தேங்காய்ப் பால் - அரை கப், சின்ன வெங்காயம் - ஒரு கப், பச்சைமிளகாய் - 50 கிராம், வெல்லம் - சிறு துண்டு, பெருங்காயத்தூள், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: 1.பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெங்காயத்தை சின்னதாகவும் நறுக்கிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு, மிதமான தீயில் வதக்கவும். 3.நன்றாக வதங்கியதும் புளியைக் கரைத்து விட்டு உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும். 4.கடைசியாக தேங்காய்ப் பாலை விட்டு கலக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|