|
||||||||
பீட்ரூட் இலை வறை(Beetroot Leaf Varai) |
||||||||
தேவையானவை : பீட்ரூட் இலை - 1கட்டு (நிளமாக வெட்டியது) உப்பு - தேவையானளவு தேங்காய்ப்பூ - தேவையான அளவு மிளகாய்த்தூள் -அரை டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 எலுமிச்சை சாறு- சிறிதளவு சீரகம் - கால் டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - தேவையான அளவு பச்சைமிளகாய் - தேவையான அளவு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - கால் டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்னர் அதனுடன் நீளமாக வெட்டி கழுவிய பீட்ரூட் இலைகளை போட்டு ஓரளவு பொரிய விடவும். 2.அது ஒரளவு பொரிந்த பின்பு அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ ஆகியவற்றை சேர்த்து கலந்து சிறிது நேரம் பொரிய விட வேண்டும்.இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி நன்றாக பிரட்ட வேண்டும். 3.எல்லாம் கலந்து பிரட்டிய பின்பு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு இறக்கவும் . |
||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|