LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-53

2.053.திருப்புறவார் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர். 
தேவியார் - திருப்புருவமின்னாளம்மை. 
2037 விண்ண மர்ந்தன மும்ம தில்களை 
வீழ வெங்கணை யாலெய் தாய்விரி 
பண்ணமர்ந் தொலிசேர் 
புறவார் பனங்காட்டூர்ப் 
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய 
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக் 
கண்ணமர்ந் தவனே 
கலந்தார்க் கருளாயே.
2.053. 1
வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக. 
2038 நீடல் கோடல் அலரவெண் முல்லை 
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப் 
பாடல் வண்டறையும் 
புறவார் பனங்காட்டூர்த் 
தோடி லங்கிய காத யன்மின் 
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள் 
ஆடுஞ் சங்கரனே 
அடைந்தார்க் கருளாயே.
2.053. 2
நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசை பாடும்புறவார் பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2039 வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை 
வார்பு னற்கரை யருகெ லாம்வயற் 
பாளை யொண்கமுகம் 
புறவார் பனங்காட்டூர்ப் 
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத 
மத்த மும்புனை வாய்க ழலிணைத் 
தாளையே பரவுந் 
தவத்தார்க் கருளாயே.
2.053. 3
வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 
2040 மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி 
மேற்ப டுகலின் மேதி வைகறை 
பாய்ந்த தண்பழனப் 
புறவார் பனங்காட்டூர் 
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் 
அடிக ளென்றென் றரற்றி நன்மலர் 
சாய்ந்தடி பரவுந் 
தவத்தார்க் கருளாயே.
2.053.4
வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென் கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்று குளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடி பரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக. 
2041 செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் 
சீறி யாழ்முரல் தேனி னத்தொடு 
பங்கயம் மலரும் 
புறவார் பனங்காட்டூர்க் 
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் 
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி 
அங்கை யாடலனே 
அடியார்க் கருளாயே.
2.053. 5
செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக. 
2042 நீரி னார்வரை கோலி மால்கடல் 
நீடி யபொழில் சூழ்ந்து வைகலும் 
பாரினார் பிரியாப் 
புறவார் பனங்காட்டூர்க் 
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு 
கடவு ளென்றுகை கூப்பி நாடொறும் 
சீரினால் வணங்குந் 
திறத்தார்க் கருளாயே.
2.053. 6
பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக. 
2043 கைய ரிவையர் மெல்வி ரல்லவை 
காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி 
பையரா விரியும் 
புறவார் பனங்காட்டூர் 
மெய்ய ரிவையொர் பாக மாகவும் 
மேவி னாய்கழ லேத்தி நாடொறும் 
பொய்யிலா வடிமை 
புரிந்தார்க் கருளாயே.
2.053. 7
மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக. 
2044 தூவி யஞ்சிறை மெல்ந டையன 
மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப் 
பாவில் வண்டறையும் 
புறவார் பனங்காட்டூர் 
மேவி யந்நிலை யாய ரக்கன 
தோள டர்த்தவன் பாடல் கேட்டருள் 
ஏவியெம் பெருமான் 
என்பவர்க் கருளாயே.
2.053. 8
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக. 
2045 அந்தண் மாதவி புன்னை நல்ல 
அசோக மும்மர விந்தம் மல்லிகை 
பைந்தண் ஞாழல்கள் 
சூழ்புறவார் பனங்காட்டூர் 
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் 
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர் 
சந்தம் ஆயவனே 
தவத்தார்க் கருளாயே.
2.053. 9
அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக. 
2046 நீண மார்முரு குண்டு வண்டினம் 
நீல மாமலர் கவ்வி நேரிசை 
பாணில் யாழ்முரலும் 
புறவார் பனங்காட்டூர் 
நாண ழிந்துழல் வார்ச மணரும் 
நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை 
ஊணுரி யவனே 
உகப்பார்க் கருளாயே.
2.053. 10
வண்டுகள், பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக. 
2047 மையி னார்மணி போல்மி டற்றனை 
மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் 
பைய தேன்பொழில்சூழ் 
புறவார் பனங்காட்டூர் 
ஐய னைப்புக ழான காழியுள் 
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் 
செய்யுள் பாடவல்லார் 
சிவலோகஞ் சேர்வாரே.
2.053. 11
கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார். பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர். 
திருச்சிற்றம்பலம்

2.053.திருப்புறவார் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர். தேவியார் - திருப்புருவமின்னாளம்மை. 

2037 விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக் கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.2.053. 1
வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக. 

2038 நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப் பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த் தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள் ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.2.053. 2
நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசை பாடும்புறவார் பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2039 வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற் பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப் பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத் தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.2.053. 3
வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக. 

2040 மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர் ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர் சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.2.053.4
வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென் கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்று குளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடி பரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக. 

2041 செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க் கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.2.053. 5
செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக. 

2042 நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க் காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும் சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.2.053. 6
பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக. 

2043 கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி பையரா விரியும் புறவார் பனங்காட்டூர் மெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும் பொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.2.053. 7
மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக. 

2044 தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப் பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர் மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள் ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.2.053. 8
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக. 

2045 அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர் எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர் சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.2.053. 9
அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக. 

2046 நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர் நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.2.053. 10
வண்டுகள், பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக. 

2047 மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர் ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.2.053. 11
கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார். பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.