LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-81

4.081.கோயில் - திருவிருத்தம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 
தேவியார் - சிவகாமியம்மை. 
780 கருநட்ட கண்டனை யண்டத் தலைவனைக்
கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந்
தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற்
றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று
வாழ்த்துவனே.
4.081.1
கருமை நிலைபெற்ற நீலகண்டனாய், உலகங்களுக்குத் தலைவனாய், கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய், போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய், அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய், தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் 'தேவர்கள் தலைவன்' என்று வாழ்த்துவேன்.
781 ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக்
கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா
னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்
பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன்
றிருக்குறிப்பே.
4.081.2
வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன்எம் பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள்.அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள். உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது.
782 கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக்
காண்பதென்னே
நன்மன வர்நவி றில்லையுட் சிற்றம்
பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப்
பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த
சுவடில்லையே.
4.081.3
கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டுஅவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால், ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன்? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்துவிட்டான்.
783 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற்
பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங்
காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த
மாநிலத்தே.
4.081.4
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
784 வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி
மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன்
பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை
யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங
கூழைமையே.
4.081.5
சிவபெருமானுடைய அடியார்களே! நமக்கு நல வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது. இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக. அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய், முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய், தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும்?
785 பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப்
புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட்
பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற்
றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன்
கோல்வளைக்கே.
4.081.6
பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச, அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க,பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க, 'தெத்தே'என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவபெருமானைப் போல, திரண்டவளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர்உளரோ? (என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு.)
786 முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு
முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ்
சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென்
பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன்
குரைகழலே.
4.081.7
தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம்பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், புன்சிரிப்பும், உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும், உடல் முழுதும் பூசிய திருநீறும், பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும், இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன.
787 படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.
4.081.8
அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்துபாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்.
788 பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து
புரிசடைகண்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும்
விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம்
பலத்துநட்டம்
என்னத்த னாடல்கண்டின்புற்ற தாலிங்
விருநிலமே.
4.081.9
பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து, முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச, பிச்சை எடுத்துத் திரியும், உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய், வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது.
789 சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற்
சந்திரனை
வீட வெடுத்தது காலனை நாரணன்
நான்முகனுந்
தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம்
பலத்துநட்டம்
ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை
யாட்கொண்டதே.
4.081.10
தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.