LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-54

2.054.திருப்புகலி 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2048 உருவார்ந்த மெல்லியலோர் 
பாகமுடையீர் அடைவோர்க்குக் 
கருவார்ந்த வானுலகங் 
காட்டிக்கொடுத்தல் கருத்தானீர் 
பொருவார்ந்த தெண்கடலொண் 
சங்கந்திளைக்கும் பூம்புகலித் 
திருவார்ந்த கோயிலே 
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.054.1
அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும். 
2049 நீரார்ந்த செஞ்சடையீர் 
நிரையார்கழல்சேர் பாதத்தீர் 
ஊரார்ந்த சில்பலிய
ருழைமானுரிதோ லாடையீர் 
போரார்ந்த தெண்டிரைசென் 
றணையுங்கானற் பூம்புகலிச் 
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.054.2
கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர். 
2050 அழிமல்கு பூம்புனலு 
மரவுஞ்சடைமே லடைவெய்த 
மொழிமல்கு மாமறையீர் 
கறையார்கண்டத் தெண்டோளீர் 
பொழின்மல்கு வண்டினங்க 
ளறையுங்கானற் பூம்புகலி 
எழின்மல்கு கோயிலே 
கோயிலாக விருந்தீரே.
2.054.3
மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2051 கையிலார்ந்த வெண்மழுவொன் 
றுடையீர்கடிய கரியின்றோல் 
மயிலார்ந்த சாயன்மட 
மங்கைவெருவ மெய்போர்த்தீர் 
பயிலார்ந்த வேதியர்கள் 
பதியாய்விளங்கும் பைம்புகலி 
எயிலார்ந்த கோயிலே 
கோயிலாக விசைந்தீரே.
2.054. 4
கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2052 நாவார்ந்த பாடலீர் 
ஆடலரவம் அரைக்கார்த்தீர் 
பாவார்ந்த பல்பொருளின் 
பயன்களானீ ரயன்பேணும் 
பூவார்ந்த பொய்கைகளும் 
வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித் 
தேவார்ந்த கோயிலே 
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.054.5
நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர். 
2053 மண்ணார்ந்த மண்முழவந் 
ததும்பமலையான் மகளென்னும் 
பெண்ணார்ந்த மெய்மகிழப் 
பேணியெரிகொண் டாடினீர் 
விண்ணார்ந்த மதியமிடை 
மாடத்தாரும் வியன்புகலிக் 
கண்ணார்ந்த கோயிலே 
கோயிலாகக் கலந்தீரே.
2.054.6
மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர். 
2054 களிபுல்கு வல்லவுண 
ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர் 
அளிபுல்கு பூமுடியீர் 
அமரரேத்த வருள்செய்தீர் 
தௌபுலகு தேனினமு 
மலருள்விரைசேர் திண்புகலி 
ஒளிபுல்கு கோயிலே 
கோயிலாக வுகந்தீரே.
2.054.7
களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய 120 வரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தௌந்த தேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2055 பரந்தோங்கு பல்புகழ்சே 
ரக்கர்கோனை வரைக்கீழிட் 
டுரந்தோன்றும் பாடல்கேட் 
டுகவையளித்தீ ருகவாதார் 
புரந்தோன்று மும்மதிலு 
மெரியச்செற்றீர் பூம்புகலி 
வரந்தோன்று கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.054.8
பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச் செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2056 சலந்தாங்கு தாமரைமே 
லயனுந்தரணி யளந்தானுங் 
கலந்தோங்கி வந்திழிந்துங் 
காணாவண்ணங் கனலானீர் 
புலந்தாங்கி யைம்புலனுஞ் 
செற்றார்வாழும் பூம்புகலி 
நலந்தாங்கு கோயிலே 
கோயிலாக நயந்தீரே.
2.054. 9
நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2057 நெடிதாய வன்சமணு 
நிறைவொன்றில்லாச் சாக்கியருங் 
கடிதாய கட்டுரையாற் 
கழறமேலோர் பொருளானீர் 
பொடியாரு மேனியினீர் 
புகலிமறையோர் புரிந்தேத்த 
வடிவாருங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.054.10
காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேச, மேலானதொரு மெய்ப் பொருளாக விளங்குபவரே! பொடிபூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர். 
2058 ஒப்பரிய பூம்புகலி 
யோங்குகோயின் மேயானை 
அப்பரிசிற் பதியான 
அணிகொண்ஞான சம்பந்தன் 
செப்பரிய தண்டமிழாற் 
றெரிந்தபாட லிவைவல்லார் 
எப்பரிசி லிடர்நீங்கி 
யிமையோருலகத் திருப்பாரே.
2.054.11
ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.054.திருப்புகலி 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2048 உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீர் அடைவோர்க்குக் கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர் பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.2.054.1
அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும். 

2049 நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர் ஊரார்ந்த சில்பலியருழைமானுரிதோ லாடையீர் போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானற் பூம்புகலிச் சீரார்ந்த கோயிலேகோயிலாகச் சேர்ந்தீரே.2.054.2
கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர். 

2050 அழிமல்கு பூம்புனலு மரவுஞ்சடைமே லடைவெய்த மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்டோளீர் பொழின்மல்கு வண்டினங்க ளறையுங்கானற் பூம்புகலி எழின்மல்கு கோயிலே கோயிலாக விருந்தீரே.2.054.3
மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2051 கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்றோல் மயிலார்ந்த சாயன்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர் பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி எயிலார்ந்த கோயிலே கோயிலாக விசைந்தீரே.2.054. 4
கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2052 நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர் பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீ ரயன்பேணும் பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித் தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.2.054.5
நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர். 

2053 மண்ணார்ந்த மண்முழவந் ததும்பமலையான் மகளென்னும் பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர் விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக் கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.2.054.6
மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர். 

2054 களிபுல்கு வல்லவுண ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர் அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த வருள்செய்தீர் தௌபுலகு தேனினமு மலருள்விரைசேர் திண்புகலி ஒளிபுல்கு கோயிலே கோயிலாக வுகந்தீரே.2.054.7
களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய 120 வரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தௌந்த தேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2055 பரந்தோங்கு பல்புகழ்சே ரக்கர்கோனை வரைக்கீழிட் டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீ ருகவாதார் புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.054.8
பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச் செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2056 சலந்தாங்கு தாமரைமே லயனுந்தரணி யளந்தானுங் கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர் புலந்தாங்கி யைம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.2.054. 9
நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2057 நெடிதாய வன்சமணு நிறைவொன்றில்லாச் சாக்கியருங் கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர் பொடியாரு மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.054.10
காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேச, மேலானதொரு மெய்ப் பொருளாக விளங்குபவரே! பொடிபூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர். 

2058 ஒப்பரிய பூம்புகலி யோங்குகோயின் மேயானை அப்பரிசிற் பதியான அணிகொண்ஞான சம்பந்தன் செப்பரிய தண்டமிழாற் றெரிந்தபாட லிவைவல்லார் எப்பரிசி லிடர்நீங்கி யிமையோருலகத் திருப்பாரே.2.054.11
ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.