LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-113

4.113.தனி 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
1050 வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன்
வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன்
விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள்
ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய
வேதியனே. 
4.113.1
வெண்ணிறத்தினை உடைய சங்கின் துண்டு போன்ற வெண்ணிறமான மண்டையோட்டை ஏந்தியவனாய், வெள்ளியை முறுக்கினாற் போன்ற வெள்ளிய பூணூலை அணிந்தவனாய், விரிந்த சடையின்மேல் வெள்ளித்தகடு போன்ற வெண்பிறையைச் சூடியவனாய், வெள்ளிய எலும்புகளை அணிந்து பவளம் போன்ற உடலில் வெண்ணிறநீற்றைப் பூசிய வேதியன் சிவபெருமான் ஆவான்.
1051 உடலைத் துறந்துல கேழுங் கடந்துல
வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங்
கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப்
பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட்
டுணிநெஞ்சமே. 
4.113.2
நெஞ்சமே! பொன் போல ஒளிவீசும் செந்நிறமுடைய பரவிய சடையில் கடல் போன்ற அலைகளை உடைய கங்கையையும் குளிர்ந்த பிறையையும் வைத்த, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய தெய்வத்தின் அடிமை செய்தற்கண் துணிவுடையை ஆவாய். அவ்வாறு செய்தால் பிண்டமாகிய உடலைத் துறந்து, ஏழுலகமான அண்டத்தைக் கடந்து அழியாத பிறவித்துன்பக் கடலைக் கடந்து நாம் பிழைத்துப் பாசநீக்கம் பெற்று அப்பெருமானுடைய வீட்டுலகை அடையலாம்.
1052 முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம்
மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா
நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி
கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை
வேண்டியதே.
4.113.3
தீவண்ணனே! உன் முன்னிலையில் யான் ஏதாவது கூறினால் அது உபசாரவார்த்தை போலக் காணப்படும். இம் மூவுலகுக்கும் தாயும் தந்தையும் ஆயவன் நீ அல்லையோ? உன்னைத் தியானித்துக் கொண்டே என் உயிர் நீங்கும். எண் உயிர் இவ்வுடலை நீங்கியபின் என்னை, நீ மறக்கக் கூடாது என்பதனையே யான் உன்னை வேண்டுகிறேன்.
1053 நின்னையெய் போது நினையவொட் டாய்நீ
நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி
தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி
யிறையவனே.
4.113.4
இறையவனே! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை. உன்னை உறுதியாகத் தியானிக்கப் புகுந்தால் அப்போதே அதனை மறக்கச் செய்து வேறொரு பொருளில் அடியேனுடைய மனம் ஈடுபடுமாறு செய்கின்றாய். உன்னை எப்போதும் மறந்தவனாயினும் உனக்கு இனியனாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனை ஒத்தவர் வேறு எவரேனும் இவ்வுலகில் உள்ளனரோ என்பதனைச் சொல்லுவாயாக.
1054 முழுத்தழன் மேனித் தவளப் பொடியன்
கனகக்குன்றத்
தெழிற் 1பெருஞ் சோதியை யெங்கள் பிரானை
யிகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத்
தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன்
றொண்டரையே.
4.113.5
முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய், மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான்.
1055 விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி
நீருடுத்த
மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு
வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ
நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக்
கண்டனே.
4.113.6
எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும், மேம்பட்ட வேதத்திலும், கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும், திருமாலுடைய உள்ளத்திலும், பழகுதற்கு இனிய பண்களிலும், அடியவர் உள்ளத்தும், பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும், தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான்.
1056 பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு
பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான்
களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு
கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை
வாசிக்குமே. 
4.113.7
பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான். அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய், ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.
1057 வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட
வுத்தமர்க்கே. 
4.113.8
கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக்குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு, வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும், பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும், கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும், சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப்பற்றிய கவலை ஏதும் ஏற்படாது.
1058 சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம்
மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி
லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன்
னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென்
றெதிர்ப்படுமே. 
4.113.9
சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் 'பவன்' என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால், இவன் என்னை பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான்.
1059 என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப
ரிகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று
நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம்
மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை
வேதியனே. 
4.113.10
பொன்னை ஒத்து ஒளியுடையதாய், தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும்? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.