LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-87

4.087.திருப்பழனம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆபத்சகாயர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
833 மேவித்து நின்று விளைந்தன வெந்துயர்
துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன வல்ல
லவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ
னத்தரசே
கூவித்துக் கொள்ளுந்தனையடி யேனைக்
குறிக்கொள்வதே.
4.087.1
திருப்பழனத்தில் உகந்தருளியிருக்கும் அரசே! அடியேன் வாழ்க்கையில் தீவினையில் விளைவுகளாகிய துக்கங்கள் எல்லாம் கொடிய துயரத்தை அடையச் செய்து என்னை மேவி நிற்கின்றன. அவை தம் செயலில் சோர்ந்து கொட்டாவிவிட்டு அடியேனை விடுத்து நீங்கின அல்ல. அடியேன் அவற்றைப் போக்கச் சிவோகம் பாவனையில் இருக்கும் செய்தியைநீ அறிவாய். அடியேனை உன் அடிமைத் தொழிலில்கூவுவித்துக் கொள்ளுவதை உன் குறிக்கோளாகக் கொள்வாயாக.
834 சுற்றிநின் றார்புறங் காவ லமரர்
கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன்
வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன்
பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.2
பழனத்து அரசே! எண் திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர். நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர். திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர். இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ, அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக.
835 ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய்
மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங்
கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர்
பான்மதியம்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக்
குறிக்கொள்வதே.
4.087.3
பழனத்து அரசே! நீ மேல் உலகங்கள் ஏழனையும் கடந்து அதற்கு மேலும் உயர்ந்து கூத்து நிகழ்த்தி நின்றாய். எல்லா உயிரோடும் பொருந்தியிருக்கின்றாய். குவிந்த மெல்லிய முலைகளை உடைய பார்வதியையும் உடன் கொண்டு பால் போன்ற வெண்பிறை சூடிப் பாடிக் கொண்டு நிற்கும் நீ அடியேனையும் பிறவித் துயர்கருதி அஞ்சாதபடி ஆட்கொள்ளவேண்டுவதனை உன் திருவுள்ளத்துக் கொள்வாயாக.
836 எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன்
னேபடவும்
உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர்
குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை
வார்சடைமேல்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.4
பழனத்து அரசே! அம்பினால் மும்மதில்கள் முன்னொரு காலத்தில் அழியுமாறு எரியச் செய்து விட்டாய். பார்வதி நடுங்குமாறு ஓர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாக அணிந்து விட்டாய். நீண்ட சடையின் மீது கங்கையைப் பொறத்துத் தாங்கியுள்ளாய். அடியேனை உள்ளத்துக்கொண்டு அருள் செய்வாயாக.
837 முன்னியு முன்னி முளைத்தன மூவெயி
லும்முடனே
மன்னியு மங்கு மிருந்தனை மாய
மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ
முன்னியுமுன்னடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.5
பழனத்து அரசே! மும்மதிலிலுள்ள அரக்கர்களும்எதிர்ப்பட்டு உள்ளத்துக் கருதி உன்னொடு போராடநீ அங்கும் நிலை பெற்று இருந்து அவர்களை அழித்தாய்.வஞ்சமனத்தவராகிய புறச் சமயப் புறப்புறச்சமயத்தவர்கள் இயற்றிவைத்துள்ள நூல்களின் பொருளியல்பையும்நீ அறிவாய். நீ பல செய்திகளை நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்திலும் அடியேனை உன் உள்ளத்தில்குறித்துக் கொண்டு அருளுவாயாக.
838 ஏய்ந்தறுத் தாயின்பனாயிருந் தேபடைத்
தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணினாலன்று காமனைக்
காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தரசேயென்
பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்குறிக்கொண்
டருளுவதே.
4.087.6
பழனத்து அரசே! நீ எல்லோருக்கும்இன்பத்தை நல்குபவனாய் இருந்தும் பிரமன் தலையைமனம் பொருந்தி நீக்கினாய். மன்மதனைப் பார்வதியின்திருமணத்தின் முன்பு வெகுண்டு அழித்தாய். கூற்றுவனையும்காலால் உதைத்து அழித்தாய். அடியேனுடைய பழைய வினைகளின்பயனாகிய துன்பத்தை நுணுகுமாறு அழித்து அடியேனைக்குறிக்கொண்டு அருளுவாயாக.
839 மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக
மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும்
பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர்
பாம்பொருகை
சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.7
பழனத்து அரசே! ஒப்பற்ற திருமாலை மகிழ்வோடு உன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்து, பார்வதிக்குத் திருமேனியின் ஒரு பாகத்தைக் கொடுத்து அவளோடு கூடியிருப்பது போலவே திருமாலொடும் பொருந்தியுள்ளாய். ஒரு பாம்பைப் பிடித்து அஃது ஒருகையைச் சுற்றிக் கொண்டிருக்குமாறு செய்துள்ளாய். அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக.
840 ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு
மொள்ளழலால்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி
சுமந்துகொண்டு.
பாரினின் றாய்பழ னத்தர சேபணி
செய்பவர்கட்
காரநின் றாயடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.8
கயிலைமலையில் உள்ளம் பொருந்தி உறைகின்றாய். அத்தகைய பழனத்து அரசே! கொடிய தீயினாலே பகைவர் களை அழிப்பதற்குப் போரில் ஈடுபட்டாய். உயிர்களைப் பாரமாகச் சுமந்து கொண்டு உயிர்களுக்கு உயிராக இருக்கின்றாய். உனக்குத் தொண்டு செய்யும் அடியவர்கள் மனநிறைவு அடையுமாறு திருக்கோயில்களில் நிலையாக இருக்கும் நீ அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக.
841 போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர்
புனலதனை
யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை
மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன்
பணியருளால்
ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே.
4.087.9
பழனத்து அரசே! முறுக்கேறிய சிவந்த சடையின் மீது கங்கையை உனக்குப் போகசக்தியாக வைத்துள்ளாய். உன் மார்பில் வைத்திருந்த பார்வதியை மகிழ்ந்து உன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விட்டாய். அருளினாலே, உனக்குத் தொண்டு செய்வதற்கே அடியேனுடைய உடம்பை அமைத்துள்ள நீ அடியேனைக் குறிக்கொண்டு (இனிப் பிறவித் துயர் அடியேற்கு நேராதவாறு) அருளுவாயாக.
842 அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு
தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை
யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி
யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண்
டருளுவதே. 
4.087.10
பழனத்து அரசே! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய். செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய். புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய். அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.