LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-55

2.055.திருத்தலைச்சங்காடு 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர். 
தேவியார் - சௌந்தரியம்மை. 
2059 நலச்சங்க வெண்குழையுந் 
தோடும்பெய்தோர் நால்வேதம் 
சொலச்சங்கை யில்லாதீர் 
சுடுகாடல்லாற் கருதாதீர் 
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் 
குளிர்கொள்சோலைக் குயிலாலும் 
தலைச்சங்கைக் கோயிலே 
கோயிலாகத் தாழ்ந்தீரே.
2.055.1
அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க் குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2060 துணிமல்கு கோவணமுந் 
தோலுங்காட்டித் தொண்டாண்டீர் 
மணிமல்கு கண்டத்தீர் 
அண்டர்க்கெல்லா மாண்பானீர் 
பிணிமல்கு நூன்மார்பர் 
பெரியோர்வாழுந் தலைச்சங்கை 
அணிமல்கு கோயிலே 
கோயிலாக அமர்ந்தீரே. 2.055.2
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீல மணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச் சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர். 
2061 சீர்கொண்ட பாடலீர் 
செங்கண்வெள்ளே றூர்தியீர் 
நீர்கொண்டும் பூக்கொண்டு 
நீங்காத்தொண்டர் நின்றேத்தத் 
தார்கொண்ட நூன்மார்பர் 
தக்கோர்வாழுந் தலைச்சங்கை 
ஏர்கொண்ட கோயிலே 
கோயிலாக விருந்தீரே. 2.055. 3
சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர். 
2062 வேடஞ்சூழ் கொள்கையீர் 
வேண்டிநீண்ட வெண்டிங்கள் 
ஓடஞ்சூழ் கங்கையும் 
உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் 
கூடஞ்சூழ் மண்டபமுங் 
குலாயவாசற் கொடித்தோன்றும் 
மாடஞ்சூழ் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே. 2.055. 4
தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச் சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடி தோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2063 சூலஞ்சேர் கையினீர் 
சுண்ணவெண்ணீ றாடலீர் 
நீலஞ்சேர் கண்டத்தீர் 
நீண்டசடைமே னீரேற்றீர் 
ஆலஞ்சேர் தண்கான 
லன்னமன்னுந் தலைச்சங்கைக் 
கோலஞ்சேர் கோயிலே 
கோயிலாகக் கொண்டீரே. 2.055.5
சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச் சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2064 நிலிநீரொ டாகாச 
மனல்காலாகி நின்றைந்து 
புலநீர்மை புறங்கண்டார் 
பொக்கஞ்செய்யார் போற்றோவார் 
சலநீத ரல்லாதார் 
தக்கோர்வாழுந் தலைச்சங்கை 
நலநீர கோயிலே 
கோயிலாக நயந்தீரே.
2.055. 6
நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூத வடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத தக்கோர் வாழும் தலைச் சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர் 
2065 அடிபுல்கு பைங்கழல்கள் 
ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் 
கொடிபுல்கு மென்சாயல் 
உமையோர் பாகங்கூடினீர் 
பொடிபுல்கு நூன்மார்பர் 
புரிநூலாளர் தலைச்சங்கைக் 
கடிபுல்கு கோயிலே 
கோயிலாகக் கலந்தீரே. 2.055. 7
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடி பூசிப்பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரி நூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம்கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2066 திரையார்ந்த மாகடல்சூழ் 
தென்னிலங்கைக் கோமானை 
வரையார்ந்த தோளடர 
விரலாலூன்று மாண்பினீர் 
அரையார்ந்த மேகலையீ 
ரந்தணாளர் தலைச்சங்கை 
நிரையார்ந்த கோயிலே 
கோயிலாக நினைந்தீரே.
2.055.8
திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கி வாழும் தலைச் சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2067 பாயோங்கு பாம்பணைமே 
லானும்பைந்தா மரையானும் 
போயோங்கிக் காண்கிலார் 
புறநின்றோரார் போற்றோவார் 
தீயோங்கு மறையாளர் 
திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் 
சேயோங்கு கோயிலே 
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.055. 9
பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காண இயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப் படுபவரே! முத்தீ வளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2068 அலையாரும் புனல்துறந்த 
அமணர்குண்டர் சாக்கியர் 
தொலையாதங் கலர்தூற்றத் 
தோற்றங்காட்டி யாட்கொண்டீர் 
தலையான நால்வேதந் 
தரித்தார்வாழுந் தலைச்சங்கை 
நிலையார்ந்த கோயிலே 
கோயிலாக நின்றீரே.
2.055.10
அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங் களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2069 நளிரும் புனற்காழி 
நல்லஞான சம்பந்தன் 
குளிருந் தலைச்சங்கை 
யோங்குகோயின் மேயானை 
ஒளிரும் பிறையானை 
யுரைத்தபாட வலிவைவல்லார் 
மிளிருந் திரைசூழ்ந்த 
வையத்தார்க்கு மேலாரே.
2.055. 11
குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர். 
திருச்சிற்றம்பலம்

2.055.திருத்தலைச்சங்காடு 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர். தேவியார் - சௌந்தரியம்மை. 

2059 நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம் சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர் குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும் தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.2.055.1
அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க் குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2060 துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லா மாண்பானீர் பிணிமல்கு நூன்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 2.055.2
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீல மணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச் சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர். 

2061 சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூன்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக விருந்தீரே. 2.055. 3
சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர். 

2062 வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும் மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.055. 4
தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச் சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடி தோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2063 சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமே னீரேற்றீர் ஆலஞ்சேர் தண்கான லன்னமன்னுந் தலைச்சங்கைக் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 2.055.5
சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச் சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2064 நிலிநீரொ டாகாச மனல்காலாகி நின்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார் சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.2.055. 6
நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூத வடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத தக்கோர் வாழும் தலைச் சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர் 

2065 அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர் பொடிபுல்கு நூன்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக் கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 2.055. 7
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடி பூசிப்பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரி நூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம்கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2066 திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை வரையார்ந்த தோளடர விரலாலூன்று மாண்பினீர் அரையார்ந்த மேகலையீ ரந்தணாளர் தலைச்சங்கை நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.2.055.8
திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கி வாழும் தலைச் சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2067 பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் போயோங்கிக் காண்கிலார் புறநின்றோரார் போற்றோவார் தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.2.055. 9
பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காண இயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப் படுபவரே! முத்தீ வளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2068 அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர் தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர் தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.2.055.10
அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங் களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2069 நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் குளிருந் தலைச்சங்கை யோங்குகோயின் மேயானை ஒளிரும் பிறையானை யுரைத்தபாட வலிவைவல்லார் மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.2.055. 11
குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.