LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-56

2.056.திருவிடைமருதூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருதீசர். 
தேவியார் - நலமுலைநாயகியம்மை. 
2070 பொங்குநூன் மார்பினீர் 
பூதப்படையீர் பூங்கங்கை 
தங்குசெஞ் சடையினீர் 
சாமவேத மோதினீர் 
எங்குமெழிலார் மறையோர்கண் 
முறையாலேத்த விடைமருதில் 
மங்குல்தோய் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.056.1
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர். 
2071 நீரார்ந்த செஞ்சடையீர் 
நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர் 
போரார்ந்த வெண்மழுவொன் 
றுடையீர் பூதம்பாடலீர் 
ஏரார்ந்த மேகலையாள் 
பாகங்கொண்டீ ரிடைமருதில் 
சீரார்ந்த கோயிலே 
கோயிலாகச் சேர்ந்தீரே. 2.056. 2
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி யாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர். 
2072 அழன்மல்கு மங்கையில் 
ஏந்திப்பூத மவைபாடச் 
சுழன்மல்கு மாடலீர் 
சுடுகாடல்லாற் கருதாதீர் 
எழின்மல்கு நான்மறையோர் 
முறையாலேத்த விடைமருதில் 
பொழில்மல்கு கோயிலே 
கோயிலாகப் பொலிந்தீரே.
2.056. 3
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர். 
2073 பொல்லாப் படுதலையொன் 
றேந்திப்புறங்காட் டாடலீர் 
வில்லாற் புரமூன்றும் 
எரித்தீர் விடையார் கொடியினீர் 
எல்லாக் கணங்களும் 
முறையாலேத்த விடைமருதில் 
செல்வாய கோயிலே 
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.056.4
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2074 வருந்திய மாதவத்தோர் 
வானோரேனோர் வந்தீண்டிப் 
பொருந்திய தைப்பூச 
மாடியுலகம் பொலிவெய்தத் 
திருந்திய நான்மறையோர் 
சீராலேத்த விடைமருதில் 
பொருந்திய கோயிலே 
கோயிலாகப் புக்கீரே.
2.056. 5
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2075 சலமல்கு செஞ்சடையீர் 
சாந்தநீறு பூசினீர் 
வலமல்கு வெண்மழுவொன் 
றேந்திமயானத் தாடலீர் 
இலமல்கு நான்மறையோ 
ரினிதாவேத்த விடைமருதில் 
புலமல்கு கோயிலே 
கோயிலாகப் பொலிந்தீரே. 2.056. 6
பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி, பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2076 புனமல்கு கொன்றையீர் 
புலியினதளீர் பொலிவார்ந்த 
சினமல்கு மால்விடையீர் 
செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ 
ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில் 
கனமல்கு கோயிலே 
கோயிலாகக் கலந்தீரே. 2.056. 7
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள் விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2077 சிலையுய்த்த வெங்கணையாற் 
புரமூன்றெரித்தீர் திறலரக்கன் 
தலைபத்துந் திண்டோளு 
நெரித்தீர் தையல்பாகத்தீர் 
இலைமொய்த்த தண்பொழிலும் 
வயலுஞ்சூழ்ந்த விடைமருதில் 
நலமொய்த்த கோயிலே 
கோயிலாக நயந்தீரே.
2.056. 8
மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2078 மறைமல்கு நான்முகனு 
மாலுமறியா வண்ணத்தீர் 
கறைமல்கு கண்டத்தீர் 
கபாலமேந்து கையினீர் 
அறைமல்கு வண்டினங்க 
ளாலுஞ்சோலை யிடைமருதில் 
நிறைமல்கு கோயிலே 
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.056. 9
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 
2079 சின்போர்வைச் சாக்கியரும் 
மாசுசேருஞ் சமணரும் 
துன்பாய கட்டுரைகள் 
சொல்லி யல்லல்தூற்றவே 
இன்பாய வந்தணர்க 
ளேத்துமேர்கொ ளிடைமருதில் 
அன்பாய கோயிதேல 
கோயிலாக வமர்ந்தீரே.
2.056. 10
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2080 கல்லின் மணிமாடக் 
கழுமலத்தார் காவலவன் 
நல்ல அருமறையான் 
நற்றமிழ் ஞானசம்பந்தன் 
எல்லி யிடைமருதில் 
ஏத்துபாட லிவைபத்தும் 
சொல்லு வார்க்குங் 
கேட்பார்க்குந் துயரம்இல்லையே.
2.056.11
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

2.056.திருவிடைமருதூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருதீசர். தேவியார் - நலமுலைநாயகியம்மை. 

2070 பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதினீர் எங்குமெழிலார் மறையோர்கண் முறையாலேத்த விடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.056.1
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர். 

2071 நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர் போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர் ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீ ரிடைமருதில் சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 2.056. 2
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி யாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர். 

2072 அழன்மல்கு மங்கையில் ஏந்திப்பூத மவைபாடச் சுழன்மல்கு மாடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர் எழின்மல்கு நான்மறையோர் முறையாலேத்த விடைமருதில் பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.2.056. 3
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர். 

2073 பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர் வில்லாற் புரமூன்றும் எரித்தீர் விடையார் கொடியினீர் எல்லாக் கணங்களும் முறையாலேத்த விடைமருதில் செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.2.056.4
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2074 வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப் பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத் திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில் பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.2.056. 5
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2075 சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர் வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர் இலமல்கு நான்மறையோ ரினிதாவேத்த விடைமருதில் புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. 2.056. 6
பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி, பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2076 புனமல்கு கொன்றையீர் புலியினதளீர் பொலிவார்ந்த சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில் கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 2.056. 7
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள் விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2077 சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன் தலைபத்துந் திண்டோளு நெரித்தீர் தையல்பாகத்தீர் இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த விடைமருதில் நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.2.056. 8
மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2078 மறைமல்கு நான்முகனு மாலுமறியா வண்ணத்தீர் கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர் அறைமல்கு வண்டினங்க ளாலுஞ்சோலை யிடைமருதில் நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.2.056. 9
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். 

2079 சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணரும் துன்பாய கட்டுரைகள் சொல்லி யல்லல்தூற்றவே இன்பாய வந்தணர்க ளேத்துமேர்கொ ளிடைமருதில் அன்பாய கோயிதேல கோயிலாக வமர்ந்தீரே.2.056. 10
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2080 கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன் நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன் எல்லி யிடைமருதில் ஏத்துபாட லிவைபத்தும் சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரம்இல்லையே.2.056.11
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.