LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-பிற்சேர்க்கை-1

3.1.திருவிடைவாய் 
------ 
திருச்சிற்றம்பலம் 
இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.
4148 மறியார் கரத்தெந்தை யம்மா துமையோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே 3.1.1
மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். ‘பிரியாத’ என்பது எதுகை நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.
4149 ஒவ்வாத என்பே யிழையா வொளிமௌலிச்
செவ்வான் மதிவைத் தவர்சேர் விடமென்பர்
எவ்வா யிலுமே டலர்கோ டலம்போது
வெவ்வா யரவம் மலரும் விடைவாயே 3.1.2
யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிம
4150 கரையார் கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத்
திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே 3.1.3
கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச் சூடியவரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும் நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும் ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.
4151 கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்
வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்
வீசக் களியன் னமல்கும் விடைவாயே 3.1.4
கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்து வந்த கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது இடம், மணம் பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர் வெண்சாமரை போலவீச, அன்னம் மகிழ்வோடு உடையும் திருவிடைவாய் என்பர்.
4152 திரியும் புரமூன் றையுஞ்செந் தழலுண்ண 
வெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர் 
கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே 3.1.5
வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று விரிந்தசையும் கொடிகள் வானவரை அழைப்பது போலசையும் திருவிடைவாய் என்பர்.
4153 கிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்
தள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே 3.1.6
சிவபெருமானை
4154 பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே 3.1.7
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
4155 எண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்
பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்
கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே 3.1.8
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
4156 புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்
தௌவார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே 3.1.9
திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தௌந்த நீரோடைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர். 
4157 உடைஏ துமிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே 3.1.10
ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும் சமண புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய அப்பெருமான் விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய திரிபுரங்களை அழித்து அவற்றின் தலைவர்களாய மூன்று அசுரர்ளுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய சிவபெருமானது அழகிய திருவிடைவாய் என்பர். 
4158 ஆறும் மதியும் பொதிவே ணியானூரா
மாறில் பெருஞ்செல் வம்மலி விடைவாயை
நாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்
கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே 3.1.11
கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய சடைமுடியை உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த திருவிடைவாயை, பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்தமிழ் மாலையை ஓதி வழிபட வல்லவர் குற்றமற்றவராவர். 
திருச்சிற்றம்பலம்

3.1.திருவிடைவாய் 
------ 
திருச்சிற்றம்பலம் 

இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.

4148 மறியார் கரத்தெந்தை யம்மா துமையோடும்பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கிவெறியார் மலரில் துயிலும் விடைவாயே 3.1.1
மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். ‘பிரியாத’ என்பது எதுகை நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.

4149 ஒவ்வாத என்பே யிழையா வொளிமௌலிச்செவ்வான் மதிவைத் தவர்சேர் விடமென்பர்எவ்வா யிலுமே டலர்கோ டலம்போதுவெவ்வா யரவம் மலரும் விடைவாயே 3.1.2
யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிம

4150 கரையார் கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத்திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டுவிரையார் புனல்வந் திழியும் விடைவாயே 3.1.3
கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச் சூடியவரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும் நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும் ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.

4151 கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்பாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்வீசக் களியன் னமல்கும் விடைவாயே 3.1.4
கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்து வந்த கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது இடம், மணம் பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர் வெண்சாமரை போலவீச, அன்னம் மகிழ்வோடு உடையும் திருவிடைவாய் என்பர்.

4152 திரியும் புரமூன் றையுஞ்செந் தழலுண்ண வெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர் கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே 3.1.5
வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று விரிந்தசையும் கொடிகள் வானவரை அழைப்பது போலசையும் திருவிடைவாய் என்பர்.

4153 கிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்தள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே 3.1.6
சிவபெருமானை

4154 பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்கீதத் தொலியுங் கெழுமும் முழவோடுவேதத் தொலியும் பயிலும் விடைவாயே 3.1.7
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.

4155 எண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே 3.1.8
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.

4156 புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்ஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்தௌவார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே 3.1.9
திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தௌந்த நீரோடைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர். 

4157 உடைஏ துமிலார் துவராடை யுடுப்போர்கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்தவிடையார் கொடியான் அழகார் விடைவாயே 3.1.10
ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும் சமண புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய அப்பெருமான் விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய திரிபுரங்களை அழித்து அவற்றின் தலைவர்களாய மூன்று அசுரர்ளுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய சிவபெருமானது அழகிய திருவிடைவாய் என்பர். 

4158 ஆறும் மதியும் பொதிவே ணியானூராமாறில் பெருஞ்செல் வம்மலி விடைவாயைநாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே 3.1.11
கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய சடைமுடியை உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த திருவிடைவாயை, பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்தமிழ் மாலையை ஓதி வழிபட வல்லவர் குற்றமற்றவராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.