LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-37

3.037.திருப்பிரமபுரம் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
3190 கரமுனம்மல ராற்புனன்மலர்
தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம்
மையனாடொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்னருள் பேணியே
3.037.1
யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது. பக்தர்களும், சித்தர்களும் போற்றி வணங்க, அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்யவல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து, மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக. 
3191 விண்ணிலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் றன்றலை
உண்ணநன்பலி பேணினானுல
கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர்
கின்றவெம்முடை யாதியே
3.037.2
இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர். விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர். உலகத்து உயிர்கட்கு உடம்பும், உயிருமானவர். மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார். 
3192 எல்லையில்புக ழாளனும்மிமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழி றேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே
3.037.3
இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர். தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர். பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர். அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தௌந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட, வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார். 
3193 அடையலார்புரம் சீறியந்தண
ரேத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துறைகோயிலான்
றொடையலார்நறுங் கொன்றையான்றொழி
லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற்
கீதுகாரணங் காண்மினே
3.037.4
பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து, அந்தணர்கள் போற்றி வணங்க, உமா தேவியோடு, பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான். இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு, நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து, அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக. 
3194 வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்மெரி கானிடைப்புரி
நாடகம்மினி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
றாயிடைப்பொரு டந்தையாகுமென்
றோதுவார்க்கரு டன்மையே
3.037.5
இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன். தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று, சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன். பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன். திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே, பெற்ற தாயும், தந்தையும், மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன். 
3195 ஊடினாலினி யாவதென்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
யெந்தையொன்றுநின் றேத்திடே
3.037.6
உயர் நெஞ்சமே! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவபெருமான். தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன். திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும், மலரை ஒத்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக. 
3196 செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில
ரென்றுமேத்தி நினைந்திட
ஐயனாண்டகை யந்தணனரு
மாமறைப்பொரு ளாயினான்
பெய்யுமாமழை யானவன்பிர
மாபுரமிடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
தேத்துமின்வினை வீடவே
3.037.7
இறைவன் சிவந்த திருமேனியுடையவன். வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன். சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன். அளவில்லா ஆற்றலும், எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன். அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன். பெய்யும் மழைபோன்றவன். திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக! 
3197 கன்றொருக்கையி லேந்திநல்விள
வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொரு
டேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி
யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே
3.037.8
ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும், அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடியும் காணாதவராயினர். அப்பெருமான் அருள் தன்மையும், ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான். 
3198 உண்டுடுக்கைவிட் டார்களும்முயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்கு சொற்பேசும்அப்பரி
வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழன்
மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர
மாபுரத்துறை கூத்தனே
3.037.9
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும், மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள். உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர். அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா. வீணை,அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான். அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக! 
3199 பித்தனைப்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
செய்துநன்பொருண் மேவிட
வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே
3.037.10
பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில், ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

3.037.திருப்பிரமபுரம் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

3190 கரமுனம்மல ராற்புனன்மலர்தூவியேகலந் தேத்துமின்பரமனூர்பல பேரினாற்பொலிபத்தர்சித்தர்கள் தாம்பயில்வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம்மையனாடொறு மேயசீர்ப்பிரமனூர்பிர மாபுரத்துறைபிஞ்ஞகன்னருள் பேணியே3.037.1
யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது. பக்தர்களும், சித்தர்களும் போற்றி வணங்க, அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்யவல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து, மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக. 

3191 விண்ணிலார்மதி சூடினான்விரும்பும்மறையவன் றன்றலைஉண்ணநன்பலி பேணினானுலகத்துளூனுயி ரான்மலைப்பெண்ணினார்திரு மேனியான்பிரமாபுரத்துறை கோயிலுள்அண்ணலாரரு ளாளனாயமர்கின்றவெம்முடை யாதியே3.037.2
இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர். விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர். உலகத்து உயிர்கட்கு உடம்பும், உயிருமானவர். மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார். 

3192 எல்லையில்புக ழாளனும்மிமையோர்கணத்துடன் கூடியும்பல்லையார்தலை யிற்பலியதுகொண்டுகந்த படிறனுந்தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்தூமலர்சொரிந் தேத்தவேமல்லையம்பொழி றேன்பில்கும்பிரமாபுரத்துறை மைந்தனே3.037.3
இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர். தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர். பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர். அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தௌந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட, வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார். 

3193 அடையலார்புரம் சீறியந்தணரேத்தமாமட மாதொடும்பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிரமாபுரத்துறைகோயிலான்றொடையலார்நறுங் கொன்றையான்றொழிலேபரவிநின் றேத்தினால்இடையிலார்சிவ லோகமெய்துதற்கீதுகாரணங் காண்மினே3.037.4
பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து, அந்தணர்கள் போற்றி வணங்க, உமா தேவியோடு, பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான். இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு, நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து, அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக. 

3194 வாயிடைம்மறை யோதிமங்கையர்வந்திடப்பலி கொண்டுபோய்ப்போயிடம்மெரி கானிடைப்புரிநாடகம்மினி தாடினான்பேயொடுங்குடி வாழ்வினான்பிரமாபுரத்துறை பிஞ்ஞகன்றாயிடைப்பொரு டந்தையாகுமென்றோதுவார்க்கரு டன்மையே3.037.5
இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன். தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று, சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன். பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன். திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே, பெற்ற தாயும், தந்தையும், மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன். 

3195 ஊடினாலினி யாவதென்னுயர்நெஞ்சமேயுறு வல்வினைக்கோடிநீயுழல் கின்றதென்னழலன்றுதன்கையி லேந்தினான்பீடுநேர்ந்தது கொள்கையான்பிரமாபுரத்துறை வேதியன்ஏடுநேர்மதி யோடராவணியெந்தையொன்றுநின் றேத்திடே3.037.6
உயர் நெஞ்சமே! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவபெருமான். தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன். திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும், மலரை ஒத்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக. 

3196 செய்யன்வெள்ளிய னொள்ளியார்சிலரென்றுமேத்தி நினைந்திடஐயனாண்டகை யந்தணனருமாமறைப்பொரு ளாயினான்பெய்யுமாமழை யானவன்பிரமாபுரமிடம் பேணியவெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்தேத்துமின்வினை வீடவே3.037.7
இறைவன் சிவந்த திருமேனியுடையவன். வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன். சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன். அளவில்லா ஆற்றலும், எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன். அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன். பெய்யும் மழைபோன்றவன். திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக! 

3197 கன்றொருக்கையி லேந்திநல்விளவின்கனிபட நூறியுஞ்சென்றொருக்கிய மாமறைப்பொருடேர்ந்தசெம்மல ரோனுமாய்அன்றரக்கனைச் செற்றவன்னடியும்முடியவை காண்கிலார்பின்றருக்கிய தண்பொழிற்பிரமாபுரத்தரன் பெற்றியே3.037.8
ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும், அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடியும் காணாதவராயினர். அப்பெருமான் அருள் தன்மையும், ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான். 

3198 உண்டுடுக்கைவிட் டார்களும்முயர்கஞ்சிமண்டைகொள் தேரரும்பண்டடக்கு சொற்பேசும்அப்பரிவொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்தண்டொடக்குவன் சூலமுந்தழன்மாமழுப்படை தன்கையிற்கொண்டொடுக்கிய மைந்தனெம்பிரமாபுரத்துறை கூத்தனே3.037.9
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும், மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள். உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர். அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா. வீணை,அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான். அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக! 

3199 பித்தனைப்பிர மாபுரத்துறைபிஞ்ஞகன்கழல் பேணியேமெய்த்தவத்துநின் றோர்களுக்குரைசெய்துநன்பொருண் மேவிடவைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன்வாய்நவின்றெழு மாலைகள்பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசைபோற்றிசெய்யுமெய்ம் மாந்தரே3.037.10
பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில், ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.