LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-பிற்சேர்க்கை-2

 

3.127.திருக்கிளியன்னவூர் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 
சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
4159 தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே. 3.2.1
4160 வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே
தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே
புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே
நன்மை யுற்ற கிளியன்ன வூரனே. 3.2.2
4161 பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே. 3.2.3
4162 அன்பர் வேண்டும் அவையளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்
துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்
இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே. 3.2.4
4163 செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே. 3.2.5
4164 எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வூரனே. 3.2.6
4165 மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட
தேவ ராக்குங் கிளியன்ன வூரனே. 3.2.7
4166 திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே. 3.2.8
4167 நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்
நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே. 3.2.9
4168 மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு ரைத்த கிளியன்ன வூரனே. 3.2.10
4169 நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே. 3.2.11
திருச்சிற்றம்பலம்

3.127.திருக்கிளியன்னவூர் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 

சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.


4159 தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்பேர்சி றக்கும் பெருமொழி உய்வகைஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே. 3.2.1
4160 வன்மை செய்யும் வறுமைவந் தாலுமேதன்மை யில்லவர் சார்பிருந் தாலுமேபுன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமேநன்மை யுற்ற கிளியன்ன வூரனே. 3.2.2
4161 பன்னி நின்ற பனுவல் அகத்தியன்உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்முன்னில் நின்ற கிளியன்ன வூரனே. 3.2.3
4162 அன்பர் வேண்டும் அவையளி சோதியான்வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே. 3.2.4
4163 செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசைபெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிடமெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே. 3.2.5
4164 எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறிமண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்புண்பொ றாதகி ளியன்ன வூரனே. 3.2.6
4165 மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்மேவு றாதுவி லக்கிடற் பாலரோதாவு றாதுன தைந்தெழுத் துன்னிடதேவ ராக்குங் கிளியன்ன வூரனே. 3.2.7
4166 திரம் மிகுத்த சடைமுடி யான்வரைஉரம் மிகுத்த இராவணன் கீண்டலும்நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்வரம் மிகுத்த கிளியன்ன வூரனே. 3.2.8
4167 நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே. 3.2.9
4168 மங்கை யர்க்கர சோடுகு லச்சிறைபொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்இங்கு ரைத்த கிளியன்ன வூரனே. 3.2.10
4169 நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனைஉறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினைஅறைய நின்றன பத்தும்வல் லார்க்குமேகுறையி லாது கொடுமை தவிர்வரே. 3.2.11
திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.