LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-73

4.073.திருச்சேறை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சென்னெறியப்பர். 
தேவியார் - ஞானவல்லியம்மை. 
707 .பெருந்திரு விமவான் பெற்ற
பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய
மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பர்
லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.1
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.
708 ஓர்த்துள வாறு நோக்கி
யுண்மையை யுணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை யாளாக் கொண்டு
பிறவிவான் பிணிக ளெல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.2
சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத, உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி, மயக்கம் தரும் அவர்கள், சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை, வயிற்று வலியால், அழுந்திய நிலையிலிருந்து எடுத்து, என்னை அடியவனாகக் கொண்டு, பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி, அடியேனுக்கு அருள் செய்தவராவர்.
709 ஒன்றிய தவத்து மன்னி
யுடையனா யுலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்து
நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.3
சேறைச் செந்நெறிச் செல்வனார், மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று, தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று, அவனுக்கு அருள்கள் பல செய்தார்.
710 அஞ்சையு மடக்கி யாற்ற
லுடையனா யநேகக லம்
வஞ்சமி றவத்து ணின்று
மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்க ளாகி
விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.4
சேறைச்செந்நெறிச் செல்வனார், ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றம் உடையவனாய், பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில்நிலைபெற்ற பகீரதனுக்காக, மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார்.
711 நிறைந்த மாமணலைக் கூப்பி
நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
கறுத்ததன் றாதை தாளை
எறிந்த மாணிக்கப் போதே
யெழில்கொள்சண் டீச னென்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.5
சேறைச் செந்நெறிச் செல்வனார், மண்ணியாற்றின் நிறைந்த, சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்கு பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய. அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று. சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார்.
712 விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால
பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு
வொண்டிரு மணிவாய் விள்ளச
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.6
சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும், உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி, யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார்.
713 சுற்றுமுன் னிமையோர் நின்று
தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை யுயக்கொ ளென்ன
மன்னுவான் புரங்கண் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்ன
மொள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.7
சேறைச் செந்நெறிச் செல்வனார், தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி, தூய மலர்களைத் தூவி, 'எம்மைக் காப்பாற்றுவாயாக' என்று வேண்ட, வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து, தேவர்களுக்கு அருள் செய்தார்.
714 முந்தியிவ் வுலக மெல்லாம்
படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்
றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.8
சேறைச் செந்நெறிச் செல்வனார், முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன், திருமாலோடு, 'எங்கள் ஒப்பற்ற தலைவனே!' என்று வணங்கித் துதிக்க, முன்னர் எல்லையில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப்பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார்.
715 ஒருவரு நிகரி லாத
வொண்டிற லரக்க னோடிப்
பெருவரை யெடுத்த திண்டோள்
பிறங்கிய முடிக ளிற்று
மருவியெம் பெருமா னென்ன
மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4.073.9
சேறைச் செந்நெறிச் செல்வனார். தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன், விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும், தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம்பெருமானே! என்று வழிபட, தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து, அவனுக்குச் சிறந்த அருள் செய்தார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.