LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-பிற்சேர்க்கை-3

 

3.128.திருமறைக்காடு
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம் 
பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம். 
4170 விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப் 
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ 
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே. 3.3.1
4171 முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே. 3.3.2
4172 கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே. 3.3.3
4173 இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.3.4
4174 பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.3.5
4175 செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே. 3.3.6
4176 மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே. 3.3.7
4177 நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே. 3.3.8
4178 மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே. 3.3.9
4179 மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே. 3.3.10
4180 மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார் 
பரமனுக் கடியர் தாமே. 3.3.11
திருச்சிற்றம்பலம்

3.128.திருமறைக்காடு
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம் 

பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம். 


4170 விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப் படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே. 3.3.1
4171 முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்திமடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லேஅடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே. 3.3.2
4172 கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவைபங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே. 3.3.3
4173 இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.3.4
4174 பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானேமருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.3.5
4175 செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோடொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்தஅப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே. 3.3.6
4176 மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானேகதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மைஇதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே. 3.3.7
4177 நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்றுந்தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யேஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே. 3.3.8
4178 மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மைஎய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே. 3.3.9
4179 மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலேஎண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே. 3.3.10
4180 மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்னபதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர் தாமே. 3.3.11

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.