LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-57

2.057.திருநல்லூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர். 
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 
2081 பெண்ணமருந் திருமேனி 
யுடையீர் பிறங்குசடைதாழப் 
பண்ணமரும் நான்மறையே 
பாடியாடல் பயில்கின்றீர் 
திண்ணமரும் பைம்பொழிலும் 
வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் 
மண்ணமருங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 1
உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2082 அலைமல்கு தண்புனலும் 
பிறையுஞ்சூடி யங்கையில் 
கொலைமல்கு வெண்மழுவு 
மனலுமேந்துங் கொள்கையீர் 
சிலைமல்கு வெங்கணையாற் 
புரமூன்றெரித்தீர் திருநல்லூர் 
மலைமல்கு கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 2
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2083 குறைநிரம்பா வெண்மதியஞ் 
சூடிக்குளிர்புன் சடைதாழப் 
பறைநவின்ற பாடலோ 
டாடல்பேணிப் பயில்கின்றீர் 
சிறைநவின்ற தண்புனலும் 
வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் 
மறைநவின்ற கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 3
என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறவைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர். 
2084 கூனமரும் வெண்பிறையும் 
புனலுஞ்சூடுங் கொள்கையீர் 
மானமரு மென்விழியாள் 
பாகமாகு மாண்பினீர் 
தேனமரும் பைம்பொழிலின் 
வண்டுபாடுந் திருநல்லூர் 
வானமருங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே. 2.057. 4
வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2085 நிணங்கவரு மூவிலையு 
மனலுமேந்தி நெறிகுழலாள் 
அணங்கமரும் பாடலோ 
டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் 
பிறையுஞ்சூடித் திருநல்லூர் 
மணங்கமழுங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.5
நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2086 கார்மருவு பூங்கொன்றை
சூடிக்கமழ் புன்சடைதாழ 
வார்மருவு மென்முலையாள் 
பாகமாகு மாண்பினீர் 
தேர்மருவு நெடுவீதிக் 
கொடிகளாடுந் திருநல்லூர் 
ஏர்மருவு கோயிலே 
கோயிலாக விருந்தீரே.
2.057. 6
கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர். 
2087 ஊன்றோயும் வெண்மழுவு 
மனலுமேந்தி யுமைகாண 
மீன்றோயுந் திசைநிறைய 
வோங்கியாடும் வேடத்தீர் 
தேன்றோயும் பைம்பொழிலின் 
வண்டுபாடுந் திருநல்லூர் 
வான்றோயுங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.7
ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத் திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர். 
2088 காதமரும் வெண்குழையீர் 
கறுத்தவரக்கன் மலையெடுப்ப 
மாதமரு மென்மொழியாண் 
மறுகும் வண்ணங் கண்டுகந்தீர் 
தீதமரா வந்தணர்கள் 
பரவியேத்துந் திருநல்லூர் 
மாதமருங் கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.8
காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2089 போதின்மே லயன்றிருமால் 
போற்றியும்மைக் காணாது 
நாதனே யிவனென்று 
நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர் 
தீதிலா அந்தணர்கள் 
தீமூன்றோம்புந் திருநல்லூர் 
மாதரா ளவளோடு 
மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
2.057. 9
தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு மகிழ்ந்து உறைகின்றீர். 
2090 பொல்லாத சமணரொடு 
புறங்கூறுஞ் சாக்கியரொன் 
றல்லாதா ரறவுரைவிட் 
டடியார்கள் போற்றோவா 
நல்லார்க ளந்தணர்கள் 
நாளுமேத்துந் திருநல்லூர் 
மல்லார்ந்த கோயிலே 
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.10
பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 
2091 கொந்தணவும் பொழில்புடைசூழ் 
கொச்சைமேவு குலவேந்தன் 
செந்தமிழின் சம்பந்தன் 
சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப் 
பந்தணவு மெல்விரலாள் 
பங்கன்றன்னைப் பயில்பாடல் 
சிந்தனையா லுரைசெய்வார் 
சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
2.057. 11
பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர். 
திருச்சிற்றம்பலம்

2.057.திருநல்லூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர். தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 

2081 பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப் பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர் திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057. 1
உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2082 அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில் கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர் சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர் மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057. 2
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2083 குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப் பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர் சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057. 3
என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறவைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர். 

2084 கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர் மானமரு மென்விழியாள் பாகமாகு மாண்பினீர் தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.057. 4
வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2085 நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள் அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர் மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057.5
நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2086 கார்மருவு பூங்கொன்றைசூடிக்கமழ் புன்சடைதாழ வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர் தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர் ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே.2.057. 6
கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர். 

2087 ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர் தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057.7
ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத் திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர். 

2088 காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப மாதமரு மென்மொழியாண் மறுகும் வண்ணங் கண்டுகந்தீர் தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர் மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057.8
காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2089 போதின்மே லயன்றிருமால் போற்றியும்மைக் காணாது நாதனே யிவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர் தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர் மாதரா ளவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.2.057. 9
தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு மகிழ்ந்து உறைகின்றீர். 

2090 பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன் றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர் மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.2.057.10
பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். 

2091 கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன் செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப் பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல் சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.2.057. 11
பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.