LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-60

2.060.திருப்பாசூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாசூர்நாதர். 
தேவியார் - பசுபதிநாயகியம்மை. 
2113 சிந்தை யிடையார் தலையின் மிசையார் 
செஞ்சொல்லார் 
வந்து மாலை வைகும் போழ்தென் 
மனத்துள்ளார் 
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா 
ரூர்போலும் 
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த 
பாசூரே.
2.060. 1
மனத்திலும் தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும். 
2114 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் 
பெம்மானென் 
றாருந் தனையு மடியா ரேத்த 
வருள்செய்வார் 
ஊரு மரவ முடையார் வாழு 
மூர்போலும் 
பாரின் மிசையார் பாட லோவாப் 
பாசூரே.
2.060. 2
இடம் விட்டுச்செல்லும் போதும், வரும்போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும். 
2115 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் 
கசிவார்கண் 
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் 
விகிர்தனார் 
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு 
மூர்போலும் 
பைவாய் நாகங் கோடலீனும் 
பாசூரே.
2.060. 3
கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக் காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும். 
2116 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் 
பொலிவெய்தக் 
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் 
குளிர்வித்தார் 
தங்கா தலியுந் தாமும் வாழு 
மூர்போலும் 
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் 
பாசூரே.
2.060. 4
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும். 
2117 ஆடற் புரியு மைவா யரவொன் 
றரைச்சாத்தும் 
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் 
பிரியாதார் 
வாடற் றலையிற் பலிதேர் கையா 
ரூர்போலும் 
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் 
பாசூரே.
2.060.5
ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும். 
2118 கானின் றதிரக் கனல்வாய் நாகங் 
கச்சாகத் 
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் 
தொழுவார்கள் 
மால்கொண் டோட மையல் தீர்ப்பா 
ரூர்போலும் 
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த 
பாசூரே.
2.060.6
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலைஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத்தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆம். 
2119 கண்ணி னயலே கண்ணொன் றுடையார் 
கழலுன்னி 
எண்ணுந் தனையு மடியா ரேத்த 
வருள்செய்வார்
உண்ணின் றுருக வுகவை தருவா 
ரூர்போலும் 
பண்ணின் மொழியார் பாட லோவாப் 
பாசூரே.
2.060. 7
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசைபோல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும். 
2120 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் 
கோமானைக் 
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் 
தம்மையே 
பேசிப் பிதற்றப் பெருமை தருவா 
ரூர்போலும் 
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த 
பாசூரே.
2.060. 8
புகழ்குன்றாத தௌந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப் பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும். 
2121 நகுவாய் மலர்மே லயனு நாகத் 
தணையானும் 
புகுவா யறியார் புறநின் றோரார் 
போற்றோவார் 
செகுவா யுகுபற் றலைசேர் கையா 
ரூர்போலும் 
பகுவாய் நாரை யாரல் வாரும் 
பாசூரே.
2.060.9
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகு மிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுலுடைய தலையோடு சேர்ந்தகையினை உடையவர். சிவபெருமான் அவரது ஊர் பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வெளவி உண்ணும் பாசூராகும். 
2122 தூய வெயினின் றுழல்வார் துவர்தோ 
யாடையார் 
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் 
நயமில்லார் 
காவல் வேவக் கணையொன் றெய்தா 
ரூர்போலும் 
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் 
பாசூரே.
2.060.10
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும். 
2123 ஞான முணர்வான் காழி ஞான 
சம்பந்தன் 
தேனும் வண்டு மின்னிசை பாடுந் 
திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட 
லிவைவல்லார் 
ஊன மிலரா யும்பர் வானத் 
துறைவாரே.
2.060. 11
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர். 
திருச்சிற்றம்பலம்

2.060.திருப்பாசூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாசூர்நாதர். தேவியார் - பசுபதிநாயகியம்மை. 

2113 சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார் மைந்தா மணாளா வென்ன மகிழ்வா ரூர்போலும் பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.2.060. 1
மனத்திலும் தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும். 

2114 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென் றாருந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார் ஊரு மரவ முடையார் வாழு மூர்போலும் பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.2.060. 2
இடம் விட்டுச்செல்லும் போதும், வரும்போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும். 

2115 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கண் மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விகிர்தனார் நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு மூர்போலும் பைவாய் நாகங் கோடலீனும் பாசூரே.2.060. 3
கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக் காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும். 

2116 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொலிவெய்தக் கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார் தங்கா தலியுந் தாமும் வாழு மூர்போலும் பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.2.060. 4
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும். 

2117 ஆடற் புரியு மைவா யரவொன் றரைச்சாத்தும் சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார் வாடற் றலையிற் பலிதேர் கையா ரூர்போலும் பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.2.060.5
ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும். 

2118 கானின் றதிரக் கனல்வாய் நாகங் கச்சாகத் தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள் மால்கொண் டோட மையல் தீர்ப்பா ரூர்போலும் பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூரே.2.060.6
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலைஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத்தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆம். 

2119 கண்ணி னயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி எண்ணுந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார்உண்ணின் றுருக வுகவை தருவா ரூர்போலும் பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.2.060. 7
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசைபோல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும். 

2120 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக் கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும் பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.2.060. 8
புகழ்குன்றாத தௌந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப் பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும். 

2121 நகுவாய் மலர்மே லயனு நாகத் தணையானும் புகுவா யறியார் புறநின் றோரார் போற்றோவார் செகுவா யுகுபற் றலைசேர் கையா ரூர்போலும் பகுவாய் நாரை யாரல் வாரும் பாசூரே.2.060.9
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகு மிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுலுடைய தலையோடு சேர்ந்தகையினை உடையவர். சிவபெருமான் அவரது ஊர் பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வெளவி உண்ணும் பாசூராகும். 

2122 தூய வெயினின் றுழல்வார் துவர்தோ யாடையார் நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார் காவல் வேவக் கணையொன் றெய்தா ரூர்போலும் பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.2.060.10
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும். 

2123 ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன் தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க்கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லார் ஊன மிலரா யும்பர் வானத் துறைவாரே.2.060. 11
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.