LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-85

4.085.திருச்சோற்றுத்துறை 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர். 
தேவியார் - ஒப்பிலாம்பிகை. 
812 காலை யெழுந்து கடிமலர் தூயன
தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை
யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை
வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக்
கழகியதே.
4.085.1
காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம், நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளைஉடைய திருச்சோற்றுத்துறையாம். அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன் அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது.
813 வண்டணை கொன்றையும் வன்னியு மத்தமும்
வாளரவும்
கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை
சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை
வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக்
கழகியதே.
4.085.2
தொண்டர்கள் ,வண்டுகள் தங்கும் கொன்றை, வன்னி, ஊமத்தை, ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி, பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது.
814 அளக்கு நெறியின னன்பர்க டம்மனத்
தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும்
விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை
வார்சடைமேல்
திளைக்கு மதியமன் றோவெம் பிரானுக்
கழகியதே.
4.085.3
எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் ,அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய், தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர்களுடையபழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும், தேவர்தலைவராய், ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப்பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது.
815 ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை
யேறியெங்கும்
பேர்ந்தகை மானிட மாடுவர் பின்னு
சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத்
துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக்
கழகியதே.
4.085.4
கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து, எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய், ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவபெருமான் கையில்ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன.
816 கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங்
கோளுழுவை
நீற்றிற் றுதைந்து திரியும் பரிசதும்
நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப வலைப்புண்
டசைந்ததொக்கும்
சோற்றுத் துறையுறை வார்சடை மேலதொர்
தூமதியே.
4.085.5
திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமான் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து, சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம்.
817 வல்லாடி நின்று வலிபேசுவார்கோளர்
வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்வானவர்
வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்றசோற்றுத்
துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்பிரானுக்
கழகியதே.
4.085.6
தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க, அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும்.
818 ஆய முடையது நாமறி யோம்அர
ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு மெய்துந்
துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை
வார்சடைமேல்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக்
கழகியதே.
4.085.7
எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனைநாம் அறியோம். முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அன்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளைஉடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும்.
819 அண்ட ரமரர் கடைந்தெழுந் தோடிய
நஞ்சதனை
உண்டு மதனை யொடுக்கவல் லான்மிக்க
வும்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை
வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம் பிரானுக்
கழகியதே.
4.085.8
பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய், மேலான இந்திரனும் திருத்தொண்டில்ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும்.
820 கடன்மணி வண்ணன்கருதியநான்முகன்
றானறியா
விடமணி கண்ட முடையவன் றானெனை
யாளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை
வார்சடைமேல
படமணி நாகமன் றோவெம் பிரானுக்
கழகியதே.
4.085.9
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய், எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும், பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும்.
821 இலங்கைக் கிறைவ னிருபது தோளு
முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக்
கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத்து றையுறை
வார்சடைமேல்
இலங்குமதியமன் றோவெம்பிரானுக்
கழகியதே.
4.085.10
இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம்கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த, ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.