LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-51

5.051.திருப்பாலைத்துறை 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாலைவனநாதர். 
தேவியார் - தவளவெண்ணகையம்மை. 
1579 நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே. 5.051.1
திருப்பாலைத்துறையர், நீலமாமணி போலும் திருக்கழுத்தினர்; நீண்ட சடையில் அழகுமிக்க பெரிய மதியையும் கங்கையையும் கூடவைத்தவர்; சூலம், மான், மழு ஏந்தித் தம் ஒளி முடியில் பாலும் நெய்யும் திருவபிடேகம் கொள்வர்.
1580 கவள மாகளிற் றின்உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே. 5.051.2
திருப்பாலைத்துறையர், சோற்றுக்கவளம் கொள்ளும் யானையின் உரியைப் போர்த்தவர்; வெள்ளிய நகைப்பை உடைய உமைமங்கையை ஒருபங்கிற் கொண்டவர்; தேவர்கள் போற்றித் திசைநோக்கித் தொழும் பவளம் போன்று சிவந்த மேனியர்.
1581 மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே. 5.051.3
திருப்பாலைத்துறையர், மின்னலையொத்த நுண்ணிடையை உடைய கன்னிப்பெண்கள் எங்கும் பலராய்க்கூடிக் காவிரியில் நீராடிப்போற்றித் திருவடிகளைத்தொழ நிலைபெற்று, நான்கு வேதங்களும் பல கீதங்களும் பன்னிய சிறப்புடையவராவர்.
1582 நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங் 
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே. 5.051.4
திருப்பாலைத்துறையர், சுடுகாடே இடமாய் நீண்டு நின்ற பேயின் தொகுதிகளும், கூடிய பூதங்களும் தம்மில் இணைந்து நின்று ஆர்க்குமாறு ஆடியவர்; அழகாகிய நான்மறை பாடியவர்.
1583 சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே. 5.051.5
திருப்பாலைத்துறையர், சித்தரும், கன்னியரும், தேவரும், தானவர்களும், பித்தர்களும், நான்கு மறைகளில் வல்லவேதியரும் பேணிய அத்தனே! நம்மை ஆளுடையாய்! என்று கூறும் அன்பர்களுக்கு அன்பராய் இருப்பர்.
1584 விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே. 5.051.6
தேவர்கள் பணிந்து ஏத்த, (அதுகண்டு) வியப்புறம் மண்ணுலகத்தோர், மறவாது "சிவாயழு என்று தியானிக்க, அவர்களுக்கு இடமாக எழில் மிகும் வானகத்தைப் படைத்தருளியவர், திருப்பாலைத்துறைப் பிரானே.
1585 குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. 5.051.7
மருவிய புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர்,கொடுகொட்டி, கொக்கரை, பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின் இசையினை விரவியவரும், குரவரும் ஆவர்.
1586 தொடருந் தொண்டரைத் துக்கந் தொடந்தவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டவர் கடிபுனல்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே. 5.051.8
நறுமணமுடைய கங்கை படரும் செஞ்சடை உடைய திருப்பாலைத்துறையர், தம்மைத்தொடரும் தொண்டரைத் துன்பங்கள் தொடர்ந்து வந்து வருத்தும்போது அரனாகத் தோன்றி அருள்செய்பவர்; கடலினின்றெழுந்த நஞ்சினை உண்டு அணிசெய்யப் பெற்ற திருக்கழுத்தினர்.
1587 மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே. 5.051.9
திருப்பலைத்துறையல், மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச் சூடுவர்: மேகலையாக நாகம் தோய்ந்த அரையினை உடையவர்; நல்லியலுடைய போகம் தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர்.
1588 வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே. 5.051.10
திருப்பாலைத்துறையர், வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர்; அடியார்க்கு அருள் வழங்குபவர்:செங்கண்ணை உடையமாலும் அயனும் தேடற்கு அரியவர்; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர்.
1589 உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஆருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே. 5.051.11
தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து,அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும்.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.