LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-62

2.062.திருமீயச்சூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர். 
தேவியார் - சுந்தரநாயகியம்மை. 
2135 காயச் செவ்விக் காமற் காய்ந்து 
கங்கையைப் 
பாயப் படர்புன் சடையிற் பதித்த 
பரமேட்டி 
மாயச் சூரன் றறுத்த மைந்தன் 
றாதைதன் 
மீயச் சூரே தொழுது வினையை 
வீட்டுமே.
2.062. 1
அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள். 
2136 பூவார் சடையின் முடிமேற் புனல 
ரனல்கொள்வர் 
நாவார் மறையர் பிறையர் நறவெண் 
டலையேந்தி 
ஏவார் மலையே சிலையாக் கழியம் 
பெரிவாங்கி 
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் 
சூராரே.
2.062.2
திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடைமுடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 
2137 பொன்னேர் கொன்றை மாலை புரளு 
மகலத்தான் 
மின்னேர் சடைக ளுடையான் மீயச் 
சூரானைத் 
தன்னேர் பிறரில் லானைத் தலையால் 
 
வணங்குவார் 
அந்நே ரிமையோ ருலக மெய்தற் 
கரிதன்றே.
2.062. 3
பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரிதன்று. 
2138 வேக மதநல் லியானை வெருவ 
 
வுரிபோர்த்துப் 
பாக முமையோ டாகப் படிதம் 
பலபாட 
நாக மரைமே லசைத்து நடமா 
டியநம்பன் 
மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் 
சூரானே.
2.062. 4
வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான். 
2139 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் 
 
பிறைவேடம் 
படையார் பூதஞ் சூழப் பாட 
லாடலார் 
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் 
கொன்றையார் 
விடையார் நடையொன் றுடையார் மீயச் 
சூராரே.
2.062. 5
திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்தபூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர். 
2140 குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல 
மார்கொன்றை 
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் 
கைகோடி 
நளிரும் மணிசூழ் மாலை நட்ட 
நவினம்பன் 
மிளிரும் மரவ முடையான் மீயச் 
சூரானே.
2.062. 6
திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்குபவனும் அரவினை அணிந்தவன். 
2141 நீல வடிவர் மிடறு நெடியர் 
நிகரில்லார் 
கோல வடிவு தமதாங் கொள்கை 
யறிவொண்ணார் 
காலர் கழலர் கரியி னுரியர் 
மழுவாளர் 
மேலர் மதியர் விதியர் மீயச் 
சூராரே.
2.062.7
திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர்.யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர். 
2142 புலியி னுரிதோ லாடை பூசும் 
பொடிநீற்றர் 
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா 
ருமையஞ்ச 
வலிய திரடோள் வன்க ணரக்கர் 
கோன்றன்னை 
மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் 
சூராரே.
2.062. 8
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர். 
2143 காதின் மிளிருங் குழையர் கரிய 
கண்டத்தார் 
போதி லவனு மாலுந் தொழப்பொங் 
கெரியானார் 
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் 
புனல்மூழ்கி 
மேதி படியும் வயல்சூழ் மீயச் 
சூராரே.
2.062. 9
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர். 
2144 கண்டார் நாணும் படியார் கலிங்க 
முடைபட்டைக் 
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த 
கொள்கையார் 
பெண்டான் பாக முடையார் பெரிய 
வரைவில்லா 
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் 
சூராரே.
2.062. 10
கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 
2145 வேட முடைய பெருமா னுறையு 
மீயச்சூர் 
நாடும் புகழார் புகலி ஞான 
சம்பந்தன் 
பாட லாய தமிழீ ரைந்து 
மொழிந்துள்கி 
ஆடு மடியா ரகல்வா னுலகம் 
அடைவாரே.
2.062.11
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

2.062.திருமீயச்சூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர். தேவியார் - சுந்தரநாயகியம்மை. 

2135 காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.2.062. 1
அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள். 

2136 பூவார் சடையின் முடிமேற் புனல ரனல்கொள்வர் நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.2.062.2
திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடைமுடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 

2137 பொன்னேர் கொன்றை மாலை புரளு மகலத்தான் மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால்  வணங்குவார் அந்நே ரிமையோ ருலக மெய்தற் கரிதன்றே.2.062. 3
பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரிதன்று. 

2138 வேக மதநல் லியானை வெருவ  வுரிபோர்த்துப் பாக முமையோ டாகப் படிதம் பலபாட நாக மரைமே லசைத்து நடமா டியநம்பன் மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.2.062. 4
வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான். 

2139 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும்  பிறைவேடம் படையார் பூதஞ் சூழப் பாட லாடலார் பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார் விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.2.062. 5
திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்தபூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர். 

2140 குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல மார்கொன்றை ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி நளிரும் மணிசூழ் மாலை நட்ட நவினம்பன் மிளிரும் மரவ முடையான் மீயச் சூரானே.2.062. 6
திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்குபவனும் அரவினை அணிந்தவன். 

2141 நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார் காலர் கழலர் கரியி னுரியர் மழுவாளர் மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.2.062.7
திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர்.யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர். 

2142 புலியி னுரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா ருமையஞ்ச வலிய திரடோள் வன்க ணரக்கர் கோன்றன்னை மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் சூராரே.2.062. 8
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர். 

2143 காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் போதி லவனு மாலுந் தொழப்பொங் கெரியானார் கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.2.062. 9
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர். 

2144 கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லா விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.2.062. 10
கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 

2145 வேட முடைய பெருமா னுறையு மீயச்சூர் நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன் பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி ஆடு மடியா ரகல்வா னுலகம் அடைவாரே.2.062.11
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.