LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-82

நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.082.திருக்கழுமலம்
4.082.திருக்கழுமலம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
790 பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின்
பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளின மேந்தின வென்பர்
நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச சடைவிரித் தாடுங்
கழுமலவர்க்
காளன்றி மற்று முண்டோ வந்தணாழி
யகலிடமே.
4.082.1
இவ்வுலகினை ஊழிவெள்ளம் மூடி முழுகச் செய்த காலத்தில் உன் பாதங்களை எல்லாம் இருபது பறவைகள் சுமந்தன என்று கூறுவர். குளிர்ந்த பிறை தங்குதலைக் கொண்டதாய், கங்கைக்குத் தங்குமிடம் வழங்கிய வள்ளன்மையை உடைய சடையை விரித்துக்கொண்டு ஆடும் திருக்கழுமலத்துப் பெருமானே! அழகிய குளிர்ந்த கடலாற் சூழப்பட்ட உலகத்துயிர்கள் உனக்கு அடிமையாதல் அன்றி வேறாதலும் உண்டோ?
791 கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங்
கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி
யுகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங்
கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையௌக நாடொறு
மாடுவரே.
4.082.2
முகப்பிலே கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க, எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய வேதியன் ஆகிய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர்.
792 திரைவாய்ப் பெருங்கடன் முத்தங் குவிப்ப
முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத்
துள்ளழுந்து
விரைவாப் நறுமலர் சூடிய விண்ணவன்
றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.3
பெரிய கடல் தன் அலை வாயிலாக முத்துக்களைக் கரையில் சேர்க்க நுரையோடுகரை சேர்ந்த அம் முத்துக்களை நெய்தல் நிலமகளிர் முகந்து கொண்டு ஓட, அத்தகைய வளம் நிறைந்த கழுமலத்துள்நிலையாக இருக்கும், நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய சிவபெருமானுடைய திருவடிகளைச் சூடி, விண்ணவனாகிய அவர் திருவடிக்கே இவை நீக்கலாகாத பரிசுகளென அர்ப்பணிப்பர். அத்திருவடிகள் நாடொறும் நம்மை ஆள்வனவாம். (நுளைச்சியர் முகந்து கொண்டோடிச் சூடி அர்ப்பணிக்கும் பரிசினவான திருவடிகள் நம்மை ஆள்வன என முடிக்க.)
793 விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும்
விழுமியநூல்
உரைக்கி லரும்பொரு ளுள்ளுவர் கேட்கி
லுலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக்
கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங் கழனம்மை
யாள்வனவே.
4.082.4
வேதங்களின் சொற்களால் விரித்துரைக்கப் படுபவனாய், மேம்பட்ட நூல்களாற் சிறப்பித்து ஓதப்படுபவனாய், சொற்களால் மக்கள் விளக்கிச் சொல்லமுடியாத அரும் பொருளாய், தன் பெருமையைக் கேட்பவர் தியானிக்கத்தக்கவனாய், உள்ள கழுமலப் பெருமான் தன் ஓசையால் பலரையும் அச்சுறுத்தும்பறையின் ஒலியோடு பூதங்கள் பாடத் தான் பண்டு ஆடும் அந்த வகையிலேயே ஆடுவதற்குப் பயன்படுத்தும் திருவடிகள் நம்மை அடிமையாக ஏற்பனவாகும்.
794 சிந்தித் தெழுமன மேநினை யாமுன்
கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்கவல் லானைப்
பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி
யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழ னாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.5
மனமே! கழுமலத்தைத் தியானித்த அளவிலேயே நம்மைக் கட்டியிருக்கும் கொடிய வினைகளைப் போக்கவல்லவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய் உள்ள பெருமானைத் தரிசித்த அந்த நேரத்திலேயே வினையை நீக்கிவிடுவோம் என்று உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் அடியவர்கள் முற்பட்டுத்தொழும் திருவடிகளே நம்மை நாடோறும் அடிமையாக ஏற்பனவாகும்.
795 நிலையும் பெருமையு நீதியுஞ் சால
வழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித்
தோணிபுரஞ்
சிலையிற் றிரிபுர மூன்றெரித் தார்தங்
கழுமலவர்
அலருங் கழலடி நாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.6
என்றும் நிலைத்திருக்கும் உறுதியும், அந்த உறுதியைப் பெறுவதற்குரிய பெருமையும், உறுதிக்கும் பெருமைக்கும் அடிப்படையான அங்கு வாழும் நன்மக்களுடைய நேர்மையும், மிகவும் அழகுடையனவாக, எங்கும் திரியும் அலைகளை உடைய ஊழிப் பெருவெள்ளத்தில் மிதந்த இத்தோணிபுரத்தில் உகந்தருளியிருப்பவரும், வில்லால் முப்புரங்களையும் தீயூட்டி எரித்த பெருமானுமாம் அவருடைய மலர்ந்த, கழல்களை அணிந்த திருவடிகள் நாள்தோறும் நம்மை அடிமையாக ஏற்பனவாகும்.
796 முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன்
மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது
சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண்
டிங்கள் சூடும்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய
கழுமலமே. 
4.082.7
எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள்பின்னிக் கிடக்க, விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த, வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது.கொன்றையும் துன்றி - பாடம்.
797 உடலு முயிரு மொருவழிச் சொல்லு
முலகத்துள்ளே
அடையு முனைவந் தடைந்தா ரமர
ரடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறு மல்குங்
கழுமலத்துள்
விடையன் றனிப்பத நாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.8
உடலும் அவ்வுடலைச் செலுத்தும் உயிரும் உலகியல் பொருள்களிலேயே புறப்பற்றும் அகப்பற்றும் கொண்டு வாழ்க்கையை நடத்தும் இவ்வுலகிலே, கூத்தும் திருவிழாக்களும் நாள்தோறும் மிகுதியாக நிகழும் கழுமலத்துள், தேவர்கள்சென்று அடையத்தக்க சரணியன் ஆன உன்னை அணுகி உன்திருவடிக்கீழ்ச் சரணாக மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய காளை வாகனனாகிய உன் ஒப்பற்ற திருவடிகளே நாள்தோறும் நம்மை ஆள்வன.
798 பரவைக் கடனஞ்ச முண்டது மில்லையிப்
பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது
நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி
காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.9
பரந்த கடலில்தோன்றிய நஞ்சினை உண்ணாமல் கழுத்திலேயே இறுத்திவிட்டாய். அந்நீலகண்டம் இவ்வுலகத்தார் எல்லோராலும் வரிசையாக வணங்கித் தொழப்படுகின்றது. தீத்தம்ப மாக நீண்ட வடிவெடுத்தாயாக, அத்தகைய உன் திருவடிகளைக் காணத் தம் முயற்சியால் திருமாலும் பிரமனும் முயன்று, பின் வழிபாட்டால் காண்பதற்கு வந்து சேர்ந்துள்ளனர். அத்தகைய கழல்கள் ஒலிக்கும் திருவடிகளே நாளும் நம்மை ஆள்வன.
799 கரையார் கடல்சூ ழிலங்கையர் கோன்றன்
முடிசிதறத்
தொலையா மலரடி யூன்றலு முள்ளம்
விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங்
காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறு நந்தமை
யாள்வனவே.
4.082.10
கரையை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய முடிகள் நெரியுமாறு, ஒருகாலத்தும் அழிவில்லாத மலர் போன்ற திருவடி விரலை ஊன்றிய அளவில் அவன் உள்ளம் நடுநடுங்கித் தலை பத்தும் வீழ்ந்து வணங்கிக் கிடக்குமாறு கயிலைமலைக்கண் உயர்ந்து விளங்கிய பெருமானுடைய திருக்கழுமலத்தலத்தைத் தரிசிப்பதனால், பிறவிப் பிணியில் வருந்தாத தன்மையை வழங்கும் அப்பெருமானுடைய திருவடிகளாகிய இவை நம்மை நாள்தோறும் அடிமையாக ஏற்பனவாகும்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.