LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-63

2.063.திருஅரிசிற்கரைப்புத்தூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர். 
தேவியார் - அழகம்மை. 
2146 மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள் 
விளங்கவே 
துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர் 
தொன்மூதூர் 
அன்னம் படியும் புனலா ரரிசில் 
அலைகொண்டு 
பொன்னும் மணியும் பொருதென் 
கரைமேற் புத்தூரே.
2.063.1
மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத்தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியையும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும். 
2147 மேவா வசுரர் மேவெயில் வேவ 
மலைவில்லால் 
ஏவா ரெரிவெங் கணையா லெய்தா 
னெய்துமூர் 
நாவா னாத னாம மோதி 
நாடோறும் 
பூவா னீராற் பூசுரர் போற்றும் 
புத்தூரே.
2.063. 2
பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப் பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும். 
2148 பல்லார் தலைசேர் மாலை சூடிப் 
பாம்பும்பூண் 
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ 
ரேறேறிக் 
கல்லார் மங்கை பங்க ரேனுங் 
காணுங்கால் 
பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப் 
புனிதரே.
2.063. 3
புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலைமாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர். 
2149 வரியேர் வளையா ளரிவை யஞ்ச 
வருகின்ற 
கரியே ருரிவை போர்த்த கடவுள் 
கருதுமூர் 
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் 
கழகாய 
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் 
புத்தூரே.
2.063. 4
வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற் பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். 
2150 என்போ டரவ மேனத் தெயிறோ 
டெழிலாமை 
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட 
மணிமார்பர் 
அன்போ டுருகு மடியார்க் கன்ப 
ரமருமூர் 
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் 
புத்தூரே.
2.063. 5
எலும், பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும். 
2151 வள்ளி முலைதோய் குமரன் றாதை 
வான்றோயும் 
வெள்ளி மலைபோல் விடையொன் 
றுடையான் மேவுமூர் 
தௌளி வருநீ ரரிசிற் றென்பால் 
சிறைவண்டும் 
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த 
புத்தூரே.
2.063.6
வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தௌவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். 
2152 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி 
னீர்மையான் 
சிலந்தி செங்கட் சோழனாகச் 
செய்தானூர் 
அலந்த வடியா னற்றைக் கன்றோர் 
காசெய்திப் 
புலர்ந்த காலை மாலை போற்றும் 
புத்தூரே.
2.063. 7
நிலம், தண்ணீர், அனல், காற்று, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும். 
2153 இத்தே ரேக விம்மலை பேர்ப்ப 
னென்றேந்தும் 
பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப் 
பாதந்தான் 
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் 
மூரான 
புத்தூர் காணப் புகுவார் வினைகள் 
போகுமே.
2.063.8
இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும். 
2154 முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு 
அடிதேட 
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா 
னூர்போலும் 
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் 
கமலங்கள் 
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் 
புத்தூரே.
2.063.9
முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடி தேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும். 
2155 கையார் சோறு கவர்குண் டர்களுந் 
துவருண்ட 
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு 
மெய்யல்ல 
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் 
புத்தூரில் 
ஐயா வென்பார்க் கையுறவின்றி 
யழகாமே.
2.063. 10
கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம். 
2156 நறவங் கமழ்பூங் காழி ஞான 
சம்பந்தன் 
பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட 
புத்தூர்மேல் 
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப 
வல்லார்கள் 
அறவன் கழல்சேர்ந் தன்போ டினப 
மடைவாரே.
2.063. 11
தேன் மணம் கமழும் அழகிய காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர் மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்ப வல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.063.திருஅரிசிற்கரைப்புத்தூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர். தேவியார் - அழகம்மை. 

2146 மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள் விளங்கவே துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர் தொன்மூதூர் அன்னம் படியும் புனலா ரரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.2.063.1
மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத்தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியையும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும். 

2147 மேவா வசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் ஏவா ரெரிவெங் கணையா லெய்தா னெய்துமூர் நாவா னாத னாம மோதி நாடோறும் பூவா னீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.2.063. 2
பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப் பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும். 

2148 பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண் டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப் புனிதரே.2.063. 3
புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலைமாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர். 

2149 வரியேர் வளையா ளரிவை யஞ்ச வருகின்ற கரியே ருரிவை போர்த்த கடவுள் கருதுமூர் அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.2.063. 4
வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற் பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். 

2150 என்போ டரவ மேனத் தெயிறோ டெழிலாமை மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர் அன்போ டுருகு மடியார்க் கன்ப ரமருமூர் பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.2.063. 5
எலும், பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும். 

2151 வள்ளி முலைதோய் குமரன் றாதை வான்றோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தௌளி வருநீ ரரிசிற் றென்பால் சிறைவண்டும் புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.2.063.6
வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தௌவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். 

2152 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான் சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.2.063. 7
நிலம், தண்ணீர், அனல், காற்று, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும். 

2153 இத்தே ரேக விம்மலை பேர்ப்ப னென்றேந்தும் பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப் பாதந்தான் வைத்தா ரருள்செய் வரதன் மருவும் மூரான புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.2.063.8
இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும். 

2154 முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு அடிதேட ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா னூர்போலும் கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.2.063.9
முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடி தேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும். 

2155 கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு மெய்யல்ல பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா வென்பார்க் கையுறவின்றி யழகாமே.2.063. 10
கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம். 

2156 நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட புத்தூர்மேல் செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல்சேர்ந் தன்போ டினப மடைவாரே.2.063. 11
தேன் மணம் கமழும் அழகிய காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர் மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்ப வல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.