LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-65

2.065.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2167 கறையணி வேலிலர் போலுங் 
கபாலந் தரித்திலர் போலும் 
மறையு நவின்றிலர் போலு 
மாசுண மார்த்திலர் போலும் 
பறையுங் கரத்திலர் போலும் 
பாசம் பிடித்திலர் போலும் 
பிறையுஞ் சடைக்கிலர் போலும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065. 1
பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூப நிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள் யாவும் உறுதிப் படுமாற்றை உணரலாம். 
2168 கூரம் பதுவிலர் போலுங் 
கொக்கி னிறகிலர் போலும் 
ஆரமும் பூண்டிலர் போலு 
மாமை யணிந்திலர் போலுந் 
தாருஞ் சடைக்கிலர் போலுஞ் 
சண்டிக் கருளிலர் போலும் 
பேரும் பலவிலர் போலும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065. 2
பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர். 
2169 சித்த வடிவிலர் போலுந் 
தேசந் திரிந்திலர் போலுங் 
கத்தி வருங்கடுங் காளி 
கதங்கள் தவிர்த்திலர் போலும் 
மெய்த்த நயன மிடந்தார்க் 
காழி யளித்திலர் போலும் 
பித்த வடிவிலர் போலும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.3
பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர். 
2170 நச்சர வாட்டிலர் போலு 
நஞ்ச மிடற்றிலர் போலுங் 
கச்சுத் தரித்திலர் போலுங் 
கங்கை தரித்திலர் போலு 
மொய்ச்சவன் பேயிலர் போலு 
முப்புர மெய்திலர் போலும் 
பிச்சை யிரந்திலர் போலும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065. 4
பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய பாம்பைப் பிடித்து ஆடச் செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர். 
2171 தோடு செவிக்கிலர் போலுஞ் 
சூலம் பிடித்திலர் போலும் 
ஆடு தடக்கை வலிய 
யானை யுரித்திலர் போலும் 
ஓடு கரத்திலர் போலு 
மொள்ளழல் கையிலர் போலும் 
பீடு மிகுத்தெழு செல்வப் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065. 5
பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர். 
2172 விண்ணவர் கண்டிலர் போலும் 
வேள்வி யழித்திலர் போலும் 
அண்ண லயன்றலை வீழ 
வன்று மறுத்திலர் போலும் 
வண்ண வெலும்பினொ டக்கு 
வடங்க டரித்திலர் போலும் 
பெண்ணின மொய்த்தெழு செல்வப் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.6
மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர். 
2173 பன்றியின் கொம்பிலர் போலும் 
பார்த்தற் கருளிலர் போலுங் 
கன்றிய காலனை வீழக் 
கால்கொடு பாய்ந்திலர் போலுந் 
துன்று பிணஞ்சுடு காட்டி 
லாடித் துதைந்திலர் போலும் 
பின்றியும் பீடும் பெருகும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.7
பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித்திளைப்பவர். 
2174 பரசு தரித்திலர் போலும் 
படுதலை பூண்டிலர் போலும் 
அரச னிலங்கையர் கோனை 
யன்று மடர்த்திலர் போலும் 
புரைசெய் புனத்திள மானும் 
புலியி னதளிலர் போலும் 
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.8
தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர். 
2175 அடிமுடி மாலயன் றேட 
வன்று மளப்பிலர் போலுங் 
கடிமல ரைங்கணை வேளைக் 
கனல விழித்திலர் போலும் 
படிமலர்ப் பாலனுக் காகப் 
பாற்கட லீந்திலர் போலும் 
பிடிநடை மாதர் பெருகும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.9
பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர். 
2176 வெற்றரைச் சீவரத் தார்க்கு 
வெளிப்பட நின்றிலர் போலும் 
அற்றவ ரானிழ னால்வர்க் 
கறங்க ளுரைத்திலர் போலும் 
உற்றல ரொன்றிலர் போலு 
மோடு முடிக்கிலர் போலும் 
பெற்றமு மூர்ந்திலர் போலும் 
பிரம புரமமர்ந் தாரே.
2.065.10
பிரமவுரம் பெருமான், வெற்றுடலோடும், சீவரம் அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப் பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத் தோன்றுபவர். தலையோட்டை முடியில் தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர். 
2177 பெண்ணுரு வாணுரு வல்லாப் 
பிரம புரநகர் மேய 
அண்ணல்செய் யாதன வெல்லா 
மறிந்து வகைவகை யாலே 
நண்ணிய ஞானசம் பந்த 
னவின்றன பத்தும்வல் லார்கள் 
விண்ணவ ரோடினி தாக 
வீற்றிருப் பாரவர் தாமே.
2.065.11
பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத (மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர். 
திருச்சிற்றம்பலம்

2.065.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2167 கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் மறையு நவின்றிலர் போலு மாசுண மார்த்திலர் போலும் பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.2.065. 1
பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூப நிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள் யாவும் உறுதிப் படுமாற்றை உணரலாம். 

2168 கூரம் பதுவிலர் போலுங் கொக்கி னிறகிலர் போலும் ஆரமும் பூண்டிலர் போலு மாமை யணிந்திலர் போலுந் தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும் பேரும் பலவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.2.065. 2
பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர். 

2169 சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் கத்தி வருங்கடுங் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் மெய்த்த நயன மிடந்தார்க் காழி யளித்திலர் போலும் பித்த வடிவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.2.065.3
பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர். 

2170 நச்சர வாட்டிலர் போலு நஞ்ச மிடற்றிலர் போலுங் கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலு மொய்ச்சவன் பேயிலர் போலு முப்புர மெய்திலர் போலும் பிச்சை யிரந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.2.065. 4
பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய பாம்பைப் பிடித்து ஆடச் செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர். 

2171 தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் ஆடு தடக்கை வலிய யானை யுரித்திலர் போலும் ஓடு கரத்திலர் போலு மொள்ளழல் கையிலர் போலும் பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.2.065. 5
பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர். 

2172 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் அண்ண லயன்றலை வீழ வன்று மறுத்திலர் போலும் வண்ண வெலும்பினொ டக்கு வடங்க டரித்திலர் போலும் பெண்ணின மொய்த்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.2.065.6
மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர். 

2173 பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் பின்றியும் பீடும் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.2.065.7
பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித்திளைப்பவர். 

2174 பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் அரச னிலங்கையர் கோனை யன்று மடர்த்திலர் போலும் புரைசெய் புனத்திள மானும் புலியி னதளிலர் போலும் பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரமமர்ந் தாரே.2.065.8
தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர். 

2175 அடிமுடி மாலயன் றேட வன்று மளப்பிலர் போலுங் கடிமல ரைங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கட லீந்திலர் போலும் பிடிநடை மாதர் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.2.065.9
பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர். 

2176 வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் அற்றவ ரானிழ னால்வர்க் கறங்க ளுரைத்திலர் போலும் உற்றல ரொன்றிலர் போலு மோடு முடிக்கிலர் போலும் பெற்றமு மூர்ந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.2.065.10
பிரமவுரம் பெருமான், வெற்றுடலோடும், சீவரம் அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப் பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத் தோன்றுபவர். தலையோட்டை முடியில் தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர். 

2177 பெண்ணுரு வாணுரு வல்லாப் பிரம புரநகர் மேய அண்ணல்செய் யாதன வெல்லா மறிந்து வகைவகை யாலே நண்ணிய ஞானசம் பந்த னவின்றன பத்தும்வல் லார்கள் விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.2.065.11
பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத (மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.