LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-52

4.052.திருவாரூர் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
498 படுகுழிப் பவ்வத் தன்ன
பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர்
மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே
னாரூர்மூ லட்ட னீரே.
4.052.1
பெரிய பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது. ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன். இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன. ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன்.
499 புழுப்பெய்த பண்டி தன்னைப்
புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்ப துவா
யொற்றுமை யொன்றுமில்லை
சழக்குடை இதனு ளைவர்
சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டே
னாரூர்மூ லட்ட னீரே.
4.052.2
ஆரூர் மூலட்டனீரே! புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.
500 பஞ்சின்மெல் லடியி னார்கள்
பாங்கரா யவர்க ணின்று
நெஞ்சினோய் பலவுஞ் செய்து
நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே
நாதனே நம்பனே நான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீ
ராரூர்மூ லட்ட னீரே.
4.052.3
விடத்தை அணிந்த கண்டரே! தலைவரே! அடியவரால் விரும்பப்படுகின்றவரே! பஞ்சினைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு அஞ்சுகின்ற எனக்கு, ஆரூர்ப் பெருமானாகிய நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர்.
501 கெண்டையந் தடங்க ணல்லார்
தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர்
குலைத்திடர்க் குழியி னூக்கக்
கண்டுநான் றரிக்க கில்லேன்
காத்துக்கொள்கறை சேர் கண்டா
அண்டவா னவர் போற்று
மாரூர்மூ லட்ட னீரே.
4.052.4
நீலகண்டரே! எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே! கெண்டைமீன்போன்ற அழகிய பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என் ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பம் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின் செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக் கொள்வீராக. 
502 தாழ்குழ லின்சொ னல்லார்
தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளு
மென்செய்கே னெந்தை பெம்மான்
வாழ்வதே லரிது போலும்
வைகலு மைவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றே
னாரூர்மூ லட்ட னீரே.
4.052.5
என் தந்தையாகிய பெருமானே! ஆரூர் மூலத்தானத்தில் உறைபவரே! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன்? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன். இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும்.
503 மாற்றமொன் றருள கில்லீர்
மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போ லைவர் வந்து
குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லே னாயே
னாரூர்மூ லட்ட னீரே.
4.052.6
ஆரூர் மூலத்தானத்துப் பெருமானே! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத் தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர். தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப் போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும் துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன். யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர் அருளுகின்றீரில்லை.
504 உயிர்நிலை யுடம்பே காலா
வுள்ளமே தாழி யாகத்
துயரமே யேற்ற மாகத்
துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப்
பாழ்க்குநீ ரிறைத்து மிக்க
அயர்வினா லைவர்க் காற்றே
னாரூர்மூ லட்ட னீரே.
4.052.7
ஆரூர்ப் பெருமானே! உயிர் நிற்றற்குரிய இவ்வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்றமரமாக அமைத்து, உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு துன்பமாகிய, ஏற்றத்தோடு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப்பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்;
505 கற்றதே லொன்று மில்லை
காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்
பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினா லைவர் வந்து
முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநா னலந்து போனே
னாரூர்மூ லட்ட னாரே.
4.052.8
ஆரூர்ப் பெருமானே! அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை. மகளிர் பின்னே அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன். என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம் ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன்.
506 பத்தனாய் வாழ மாட்டேன்
பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய
செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே
யாரூர்மூ லட்ட னாரே.
4.052.9
தலைவரே! தேவருக்கு அரசரே! ஆரூர் மூலத்தானத்தாரே! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக, என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள் தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது.
507 தடக்கைநா லைந்துங் கொண்டு
தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க வோடி
யிரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளு
முறிதர விறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
யாரூர்மூ லட்ட னீரே.
4.052.10
ஆரூர் மூலட்டானத்தாரே! நீண்டஇருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப்பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட, அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே!
திருச்சிற்றம்பலம்

4.052.திருவாரூர் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 

தேவியார் - கரும்பனையாளம்மை. 

498 படுகுழிப் பவ்வத் தன்ன

பண்டியைப் பெய்த வாற்றால்

கெடுவதிம் மனிதர் வாழ்க்கை

காண்டொறுங் கேது கின்றேன்

முடுகுவ ரிருந்து ளைவர்

மூர்க்கரே லிவர்க ளோடும்

அடியனேன் வாழ மாட்டே

னாரூர்மூ லட்ட னீரே.(4.052.1)

  பெரிய பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது. ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன். இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன. ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன்.

499 புழுப்பெய்த பண்டி தன்னைப்

புறமொரு தோலான் மூடி

ஒழுக்கறா வொன்ப துவா

யொற்றுமை யொன்றுமில்லை

சழக்குடை இதனு ளைவர்

சங்கடம் பலவுஞ் செய்ய

அழிப்பனாய் வாழ மாட்டே

னாரூர்மூ லட்ட னீரே.(4.052.2)

  ஆரூர் மூலட்டனீரே! புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.

500 பஞ்சின்மெல் லடியி னார்கள்

பாங்கரா யவர்க ணின்று

நெஞ்சினோய் பலவுஞ் செய்து

நினையினும் நினைய வொட்டார்

நஞ்சணி மிடற்றி னானே

நாதனே நம்பனே நான்

அஞ்சினேற் கஞ்ச லென்னீ

ராரூர்மூ லட்ட னீரே.(4.052.3)

  விடத்தை அணிந்த கண்டரே! தலைவரே! அடியவரால் விரும்பப்படுகின்றவரே! பஞ்சினைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு அஞ்சுகின்ற எனக்கு, ஆரூர்ப் பெருமானாகிய நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர்.

501 கெண்டையந் தடங்க ணல்லார்

தம்மையே கெழும வேண்டிக்

குண்டராய்த் திரிதந் தைவர்

குலைத்திடர்க் குழியி னூக்கக்

கண்டுநான் றரிக்க கில்லேன்

காத்துக்கொள்கறை சேர் கண்டா

அண்டவா னவர் போற்று

மாரூர்மூ லட்ட னீரே.(4.052.4)

  நீலகண்டரே! எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே! கெண்டைமீன்போன்ற அழகிய பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என் ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பம் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின் செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக் கொள்வீராக. 

502 தாழ்குழ லின்சொ னல்லார்

தங்களைத் தஞ்ச மென்று

ஏழையே னாகி நாளு

மென்செய்கே னெந்தை பெம்மான்

வாழ்வதே லரிது போலும்

வைகலு மைவர் வந்து

ஆழ்குழிப் படுக்க வாற்றே

னாரூர்மூ லட்ட னீரே.(4.052.5)

  என் தந்தையாகிய பெருமானே! ஆரூர் மூலத்தானத்தில் உறைபவரே! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன்? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன். இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும்.

503 மாற்றமொன் றருள கில்லீர்

மதியிலேன் விதியி லாமை

சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்

சிக்கன வுடைய ராகிக்

கூற்றம்போ லைவர் வந்து

குலைத்திட்டுக் கோகு செய்ய

ஆற்றவுங் கில்லே னாயே

னாரூர்மூ லட்ட னீரே.(4.052.6)

  ஆரூர் மூலத்தானத்துப் பெருமானே! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத் தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர். தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப் போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும் துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன். யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர் அருளுகின்றீரில்லை.

504 உயிர்நிலை யுடம்பே காலா

வுள்ளமே தாழி யாகத்

துயரமே யேற்ற மாகத்

துன்பக்கோ லதனைப் பற்றிப்

பயிர்தனைச் சுழிய விட்டுப்

பாழ்க்குநீ ரிறைத்து மிக்க

அயர்வினா லைவர்க் காற்றே

னாரூர்மூ லட்ட னீரே.(4.052.7)

  ஆரூர்ப் பெருமானே! உயிர் நிற்றற்குரிய இவ்வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்றமரமாக அமைத்து, உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு துன்பமாகிய, ஏற்றத்தோடு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப்பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்;

505 கற்றதே லொன்று மில்லை

காரிகை யாரோ டாடிப்

பெற்றதேற் பெரிதுந் துன்பம்

பேதையேன் பிழைப்பி னாலே

முற்றினா லைவர் வந்து

முறைமுறை துயரஞ் செய்ய

அற்றுநா னலந்து போனே

னாரூர்மூ லட்ட னாரே.(4.052.8)

  ஆரூர்ப் பெருமானே! அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை. மகளிர் பின்னே அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன். என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம் ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன்.

506 பத்தனாய் வாழ மாட்டேன்

பாவியேன் பரவி வந்து

சித்தத்து ளைவர் தீய

செய்வினை பலவுஞ் செய்ய

மத்துறு தயிரே போல

மறுகுமென் னுள்ளந் தானும்

அத்தனே யமரர் கோவே

யாரூர்மூ லட்ட னாரே.(4.052.9)

  தலைவரே! தேவருக்கு அரசரே! ஆரூர் மூலத்தானத்தாரே! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக, என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள் தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது.

507 தடக்கைநா லைந்துங் கொண்டு

தடவரை தன்னைப் பற்றி

எடுத்தவன் பேர்க்க வோடி

யிரிந்தன பூத மெல்லாம்

முடித்தலை பத்துந் தோளு

முறிதர விறையே யூன்றி

அடர்த்தருள் செய்த தென்னே

யாரூர்மூ லட்ட னீரே.(4.052.10)

  ஆரூர் மூலட்டானத்தாரே! நீண்டஇருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப்பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட, அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே!

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.