LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-66

2.066.திருஆலவாய் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. 
தேவியார் - மீனாட்சியம்மை. 
2178 மந்திர மாவது நீறு 
வானவர் மேலது நீறு 
சுந்தர மாவது நீறு 
துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு 
சமயத்தி லுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் 
திருவால வாயான் திருநீறே.
2.066. 1
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது. 
2179 வேதத்தி லுள்ளது நீறு 
வெந்துயர் தீர்ப்பது நீறு 
போதந் தருவது நீறு 
புன்மை தவிர்ப்பது நீறு 
ஓதத் தகுவது நீறு 
வுண்மையி லுள்ளது நீறு 
சீதப் புனல்வயல் சூழ்ந்த 
 
திருவால வாயான் திருநீறே.
2.066. 2
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திரு ஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவ ஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது. 
2180 முத்தி தருவது நீறு 
முனிவ ரணிவது நீறு 
சத்திய மாவது நீறு 
தக்கோர் புகழ்வது நீறு 
பத்தி தருவது நீறு 
பரவ வினியது நீறு 
சித்தி தருவது நீறு 
திருவால வாயான் திருநீறே.
2.066.3
திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது. 
2181 காண வினியது நீறு 
கவினைத் தருவது நீறு 
பேணி யணிபவர்க் கெல்லாம் 
பெருமை கொடுப்பது நீறு 
மாணந் தகைவது நீறு 
மதியைத் தருவது நீறு 
சேணந் தருவது நீறு 
திருவால வாயான் திருநீறே.
2.066.4
திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. 
2182 பூச வினியது நீறு 
புண்ணிய மாவது நீறு 
பேச வினியது நீறு 
பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் 
ஆசை கெடுப்பது நீறு 
அந்தம தாவது நீறு 
தேசம் புகழ்வது நீறு 
திருவால வாயான் திருநீறே.
2.066.5
திரு ஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்ப நிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது. 
2183 அருத்தம தாவது நீறு 
அவல மறுப்பது நீறு 
வருத்தந் தணிப்பது நீறு 
வான மளிப்பது நீறு 
பொருத்தம தாவது நீறு 
புண்ணியர் பூசும்வெண் ணீறு 
திருத்தகு மாளிகை சூழ்ந்த 
திருவால வாயான் திருநீறே.
2.066.6
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மன வருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது. 
2184 எயிலது வட்டது நீறு 
விருமைக்கு முள்ளது நீறு 
பயிலப் படுவது நீறு 
பாக்கியமாவது நீறு 
துயிலைத் தடுப்பது நீறு 
சுத்தம தாவது நீறு 
அயிலைப் பொலிதரு சூலத் 
திருவால வாயான் திருநீறே.
2.066. 7
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது. 
2185 இராவணன் மேலது நீறு 
வெண்ணத் தகுவது நீறு 
பராவண மாவது நீறு 
பாவ மறுப்பது நீறு 
தராவண மாவது நீறு 
தத்துவ மாவது நீறு 
அராவணங் குந்திரு மேனி 
யால வாயான் றிருநீறே.
2.066. 8
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது. 
2186 மாலொ டயனறி யாத 
வண்ணமு முள்ளது நீறு 
மேலுறை தேவர்கள் தங்கண் 
மெய்யது வெண்பொடி நீறு 
ஏல வுடம்பிடர் தீர்க்கு 
மின்பந் தருவது நீறு 
ஆலம துண்ட மிடற்றெம் 
மால வாயான் றிருநீறே.
2.066. 9
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப் பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது. 
2187 குண்டிகைக் கையர்க ளோடு 
சாக்கியர் கூட்டமுங் கூடக் 
கண்டிகைப் பிப்பது நீறு 
கருத வினியது நீறு 
எண்டிசைப் பட்ட பொருளா 
ரேத்துந் தகையது நீறு 
அண்டத் தவர்பணிந் தேத்து 
மால வாயான் றிருநீறே.
2.066. 10
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது. 
2188 ஆற்ற லடல்விடை யேறு 
மால வாயான்றிரு நீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் 
பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்ன னுடலுற்ற 
தீப்பிணி யாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் 
வல்லவர் நல்லவர் தாமே.
2.066.11
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தௌவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார். 
திருச்சிற்றம்பலம்

2.066.திருஆலவாய் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. தேவியார் - மீனாட்சியம்மை. 

2178 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.2.066. 1
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது. 

2179 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த  திருவால வாயான் திருநீறே.2.066. 2
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திரு ஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவ ஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது. 

2180 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.2.066.3
திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது. 

2181 காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.2.066.4
திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. 

2182 பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.2.066.5
திரு ஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்ப நிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது. 

2183 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.2.066.6
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மன வருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது. 

2184 எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.2.066. 7
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது. 

2185 இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.2.066. 8
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது. 

2186 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.2.066. 9
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப் பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது. 

2187 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.2.066. 10
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது. 

2188 ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.2.066.11
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தௌவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.