LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-67

2.067.திருப்பெரும்புலியூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர். 
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 
2189 மண்ணுமோர் பாக முடையார் 
மாலுமோர் பாக முடையார் 
விண்ணுமோர் பாக முடையார் 
வேத முடைய விமலர் 
கண்ணுமோர் பாக முடையார் 
கங்கை சடையிற் கரந்தார் 
பெண்ணுமோர் பாக முடையார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 1
திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர். 
2190 துன்னு கடற்பவ ளஞ்சேர் 
தூயன நீண்டதிண் டோள்கள் 
மின்னு சுடர்க்கொடி போலும் 
மேனியி னாளொரு கங்கைக் 
கன்னி களின்புனை யோடு 
கலைமதி மாலை கலந்த 
பின்னு சடைப்பெரு மானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.2
கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார். 
2191 கள்ள மதித்த கபாலங் 
கைதனி லேமிக வேந்தித் 
துள்ள மிதித்துநின் றாடுந் 
தொழில ரெழின்மிகு செல்வர் 
வெள்ள நகுதலை மாலை 
விரிசடை மேன்மிளிர் கின்ற 
பிள்ளை மதிப்பெரு மானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.3
கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித் துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார். 
2192 ஆடலிலைய முடையார் 
அருமறை தாங்கியா றங்கம் 
பாடலிலைய முடையார் 
பன்மை யொருமைசெய் தஞ்சும் 
ஊடலிலைய முடையார் 
யோகெனும் பேரொளி தாங்கிப் 
பீடலிலைய முடையார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 4
நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள் இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார். 
2193 தோடுடை யார்குழைக் காதிற் 
சுடுபொடி யாரன லாடக் 
காடுடை யாரெரி வீசுங் 
கையுடை யார்கடல் சூழ்ந்த 
நாடுடை யார்பொரு ளின்ப 
நல்லவை நாளு நயந்த 
பீடுடை யார்பெரு மானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.5
பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர். ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார். 
2194 கற்ற துறப்பணி செய்து 
காண்டுமென் பாரவர் தங்கண் 
முற்றி தறிதுமென் பார்கண் 
முதலியர் வேதபு ராணர் 
மற்றி தறிதுமென் பார்கண் 
மனத்திடை யார்பணி செய்யப் 
பெற்றி பெரிது முகப்பார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.6
கல்வி கற்றதன் பயனை அறிந்த பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார். 
2195 மறையுடை யாரொலி பாடன் 
மாமலர்ச் சேவடி சேர்வார் 
குறையுடை யார்குறை தீர்ப்பார் 
குழக ரழகர்நஞ் செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் 
கங்கை சடையிற் கரந்தார் 
பிறையுடை யார்சென்னி தன்மேற் 
பெரும்புலியூர்பிரி யாரே.
2.067.7
வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர். மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர். 
2196 உறவியு மின்புறு சீரு 
மோங்குதல் வீடௌ தாகித் 
துறவியுங் கூட்டமுங் காட்டித் 
துன்பமு மின்பமுந் தோற்றி 
மறவியஞ் சிந்தனை மாற்றி 
வாழவல் லார்தமக் கென்றும் 
பிறவி யறுக்கும் பிரானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 8
உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார். 
2197 சீருடை யாரடி யார்கள் 
சேடரொப் பார்சடை சேரும் 
நீருடை யார்பொடிப் பூசு 
நினைப்புடை யார்விரி கொன்றைத் 
தாருடை யார்விடை யூர்வார் 
தலைவரைந் நூற்றுப்பத் தாய 
பேருடை யார்பெரு மானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.9
புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்வர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலி யூரைப் பிரியாது உறைகின்றார். 
2198 உரிமை யுடையடி யார்கள் 
உள்ளுற வுள்கவல் லார்கட் 
கருமை யுடையன காட்டி 
யருள்செயு மாதி முதல்வர் 
கருமை யுடைநெடு மாலுங் 
கடிமல ரண்ணலுங் காணாப் 
பெருமை யுடைப்பெரு மானார் 
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.10
உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரிய திருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமை யுடைய பெருமான். அவ்விறைவர் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார். 
2199 பிறைவள ரும்முடிச் சென்னிப் 
பெரும்புலி யூர்ப்பெரு மானை 
நறைவள ரும்பொழிற் காழி 
நற்றமிழ் ஞானசம் பந்தன் 
மறைவள ருந்தமிழ் மாலை 
வல்லவர் தந்துயர் நீங்கி 
நிறைவளர் நெஞ்சின ராகி 
நீடுல கத்திருப் பாரே.
2.067. 11
பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.067.திருப்பெரும்புலியூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர். தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 

2189 மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067. 1
திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர். 

2190 துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக் கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.2
கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார். 

2191 கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக வேந்தித் துள்ள மிதித்துநின் றாடுந் தொழில ரெழின்மிகு செல்வர் வெள்ள நகுதலை மாலை விரிசடை மேன்மிளிர் கின்ற பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.3
கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித் துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார். 

2192 ஆடலிலைய முடையார் அருமறை தாங்கியா றங்கம் பாடலிலைய முடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் ஊடலிலைய முடையார் யோகெனும் பேரொளி தாங்கிப் பீடலிலைய முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067. 4
நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள் இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார். 

2193 தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.5
பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர். ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார். 

2194 கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் முற்றி தறிதுமென் பார்கண் முதலியர் வேதபு ராணர் மற்றி தறிதுமென் பார்கண் மனத்திடை யார்பணி செய்யப் பெற்றி பெரிது முகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.6
கல்வி கற்றதன் பயனை அறிந்த பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார். 

2195 மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார் குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர்கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலியூர்பிரி யாரே.2.067.7
வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர். மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர். 

2196 உறவியு மின்புறு சீரு மோங்குதல் வீடௌ தாகித் துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமு மின்பமுந் தோற்றி மறவியஞ் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067. 8
உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார். 

2197 சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.9
புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்வர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலி யூரைப் பிரியாது உறைகின்றார். 

2198 உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் கருமை யுடையன காட்டி யருள்செயு மாதி முதல்வர் கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் பெருமை யுடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.2.067.10
உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரிய திருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமை யுடைய பெருமான். அவ்விறைவர் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார். 

2199 பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.2.067. 11
பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.