LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-69

2.069.திருப்பாண்டிக்கொடுமுடி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர். 
தேவியார் - பண்மொழியம்மை. 
2211 பெண்ணமர் மேனியி னாரும் 
பிறைபுல்கு செஞ்சடை யாருங் 
கண்ணமர் நெற்றியி னாருங் 
காதம ருங்குழை யாரும் 
எண்ணம ருங்குணத் தாரு 
மிமையவ ரேத்தநின் றாரும் 
பண்ணமர் பாடலி னாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.1
பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொரு கூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர். 
2212 தனைக்கணி மாமலர் கொண்டு 
தாள்தொழு வாரவர் தங்கள் 
வினைப்பகை யாயின தீர்க்கும் 
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் 
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் 
நிரைவளை மங்கை நடுங்கப் 
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 2
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த்துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர். 
2213 சடையமர் கொன்றையி னாருஞ் 
 
சாந்தவெண் ணீறணிந் தாரும் 
புடையமர் பூதத்தி னாரும் 
 
பொறிகிளர் பாம்பசைத் தாரும் 
விடையம ருங்கொடி யாரும் 
வெண்மழு மூவிலைச் சூலப் 
படையமர் கொள்கையி னாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 3
பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர். 
2214 நறைவளர் கொன்றையி னாரு 
ஞாலமெல் லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் 
காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு 
 
மணமுழ வங்குழன் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 4
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர். 
2215 போகமு மின்பமு மாகிப் 
போற்றியென் பாரவர் தங்கள் 
ஆகமு றைவிட மாக 
வமர்ந்தவர் கொன்றையி னோடும் 
நாகமுந் திங்களுஞ் சூடி 
நன்னுதன் மங்கைதன் மேனிப் 
பாகமு கந்தவர் தாமும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.5
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர். 
2216 கடிபடு கூவிள மத்தங் 
கமழ்சடை மேலுடை யாரும் 
பொடிபட முப்புரஞ் செற்ற 
பொருசிலை யொன்றுடை யாரும் 
வடிவுடை மங்கைதன் னோடு 
மணம்படு கொள்கையி னாரும் 
படிபடு கோலத்தி னாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.6
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர். 
2217 ஊனமர் வெண்டலை யேந்தி 
யுண்பலிக் கென்றுழல் வாரும் 
தேனம ரும்மொழி மாது 
சேர்திரு மேனியி னாரும் 
கானமர் மஞ்ஞைக ளாலுங் 
காவிரிக் கோலக் கரைமேல் 
பானல நீறணி வாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.7
பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப் பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில் வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர். 
2218 புரந்தரன் றன்னொடு வானோர் 
போற்றியென் றேத்தநின் றாரும் 
பெருந்திறல் வாளரக் கன்னைப் 
பேரிடர் செய்துகந் தாரும் 
கருந்திரை மாமிடற் றாருங் 
காரகில் பன்மணி யுந்திப் 
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.8
பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர். 
2219 திருமகள் காதலி னானுந் 
திகழ்தரு மாமலர் மேலைப் 
பெருமக னும்மவர் காணாப் 
பேரழ லாகிய பெம்மான் 
மருமலி மென்மலர்ச் சந்து 
வந்திழி காவிரி மாடே 
பருமணி நீர்த்துறை யாரும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.9
திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார். 
2220 புத்தரும் புந்தியி லாத 
சமணரும் பொய்ம்மொழி யல்லான் 
மெய்த்தவம் பேசிட மாட்டார் 
வேடம் பலபல வற்றால் 
சித்தருந் தேவருங் கூடிச் 
செழுமலர் நல்லன கொண்டு 
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் 
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 10
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர். 
2221 கலமல்கு தண்கடல் சூழ்ந்த 
காழியுண் ஞானசம் பந்தன் 
பலமல்கு வெண்டலை யேந்தி 
பாண்டிக் கொடுமுடி தன்னைச் 
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் 
சொல்லவல் லார்துயர் தீர்ந்து 
நலமல்கு சிந்தைய ராகி 
நன்னெறி யெய்துவர் தாமே.
2.069. 11
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர். 
திருச்சிற்றம்பலம்

2.069.திருப்பாண்டிக்கொடுமுடி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர். தேவியார் - பண்மொழியம்மை. 

2211 பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும் பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.1
பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொரு கூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர். 

2212 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069. 2
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த்துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர். 

2213 சடையமர் கொன்றையி னாருஞ்  சாந்தவெண் ணீறணிந் தாரும் புடையமர் பூதத்தி னாரும்  பொறிகிளர் பாம்பசைத் தாரும் விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069. 3
பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர். 

2214 நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக் கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி மறைவளர் பாடலி னோடு  மணமுழ வங்குழன் மொந்தை பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069. 4
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர். 

2215 போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும் நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப் பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.5
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர். 

2216 கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.6
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர். 

2217 ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும் தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும் கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.7
பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப் பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில் வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர். 

2218 புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும் பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும் கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.8
பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர். 

2219 திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069.9
திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார். 

2220 புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான் மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.2.069. 10
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர். 

2221 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன் பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச் சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.2.069. 11
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.