LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-70

2.070.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம். 
2222 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் 
பெருநீர்த் தோணி 
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் 
புறவஞ் சண்பை 
அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் 
காதி யாய 
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் 
பரவு மூரே.
2.070. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும். 
2223 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு 
வெள்ளத் தோங்குந் 
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் 
புறவங் காழி 
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை 
கூருஞ் செல்வங் 
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் 
கருது மூரே.
2.070. 2
நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும். 
2224 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை 
புறவங் காழி 
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் 
நின்ற மூதூர் 
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் 
பெருமாற் கின்பம் 
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது 
பாடு மூரே.
2.070. 3
நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும். 
2225 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை 
வெள்ளங் கொள்ளத் 
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம 
புரந்தொல் காழி 
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் 
டாண்ட மூதூர் 
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் 
கருது மூரே.
2.070. 4
நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும். 
2226 தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத் 
துயர்தீர் காழி 
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் 
எழிலார் சண்பை 
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் 
நகரா நல்ல 
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் 
புகழு மூரே.
2.070. 5
நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும். 
2227 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை 
தலைமு னாண்ட 
வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் 
அணியார் காழி 
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர 
மேலா லேந்து 
கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது 
கருது மூரே.
2.070. 6
நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும். 
2228 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு 
புறவ நல்ல 
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ 
டந்தண் காழி 
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர 
மென்றென் றுள்கிப் 
பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய 
பெருமா னூரே.
2.070. 7
சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம். 
2229 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு 
புகலி காழி 
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் 
நான்முகன் றனூர் 
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் 
மேலம் பெய்து 
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் 
சேரு மூரே.
2.070. 8
நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும். 
2230 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் 
காழி சாயாப் 
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் 
புறவம் பார்மேல் 
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர 
நாணி லாத 
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த 
விமல னூரே.
2.070. 9
நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக்
2231 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் 
புகலி செய்ய 
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் 
சண்பை யாய 
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர 
 
மிகுநன் மாடக் 
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான் 
கருது மூரே.
2.070. 10
செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும். 
2232 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் 
புறவங் காழி 
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் 
சண்பை மூதூர் 
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர 
மாகி நம்மேல் 
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் 
அமரு மூரே.
2.070. 11
நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும். 
2233 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் 
பெயரை நாளும் 
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் 
பனுவன் மாலை 
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் 
பந்தன் சொன்ன 
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை 
விருப்பு ளாரே.
2.070. 12
குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.070.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம். 

2222 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் பரவு மூரே.2.070. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும். 

2223 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் கருது மூரே.2.070. 2
நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும். 

2224 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் நின்ற மூதூர் அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் பெருமாற் கின்பம் பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.2.070. 3
நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும். 

2225 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.2.070. 4
நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும். 

2226 தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் நகரா நல்ல பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் புகழு மூரே.2.070. 5
நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும். 

2227 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமு னாண்ட வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர மேலா லேந்து கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது கருது மூரே.2.070. 6
நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும். 

2228 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ டந்தண் காழி ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப் பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.2.070. 7
சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம். 

2229 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர் விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் சேரு மூரே.2.070. 8
நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும். 

2230 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர நாணி லாத வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.2.070. 9
நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக்

2231 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர  மிகுநன் மாடக் கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.2.070. 10
செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும். 

2232 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் சண்பை மூதூர் நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் அமரு மூரே.2.070. 11
நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும். 

2233 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் பனுவன் மாலை நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை விருப்பு ளாரே.2.070. 12
குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.