LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-73

2.073.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2256 விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் 
 
புகலிவெங் குருமேற்சோலை 
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் 
 
சிரபுரம்வண் புறவமண்மேல் 
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் 
கொச்சைகழு மலமென்றின்ன 
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் 
பகையெறிவித் திறைவனூரே.
2.073. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 
2257 திருவளருங் கழுமலமே கொச்சை 
 
தேவேந்திரனூர் அயனூர்தெய்வத் 
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் 
 
காழிதகு சண்பையொண்பா 
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் 
 
தோணிபுர முயர்ந்ததேவர் 
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் 
கண்டத்தோன் விரும்புமூரே.
2.073. 2
பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும். 
2258 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன்வாழூர் 
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் 
காழியிறை கொச்சையம்பொன் 
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய 
மிக்கயனூர் அமரர்கோனூர் 
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ 
தரனாளும் அமருமூரே.
2.073.3
சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2259 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் 
புகலிதராய் தோணிபுரம்வான் 
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே 
கொச்சைதேவேந் திரனூர்சீர்ப் 
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் 
சிலம்பனூர் காழிசண்பை 
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் 
பயன்நுகர்வோர் பரவுமூரே.
2.073.4
பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2260 தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி 
வயங்கொச்சை தயங்குபூமேல் 
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் 
விண்ணவர்தங் கோனூர்வென்றித் 
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச் 
 
செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர் 
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ 
முலகத்தி லுயர்ந்தவூரே.
2.073.5
உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும். 
2261 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு 
சிரபுரம்பூங் காழிசண்பை 
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி 
பூந்தராய் தோணிபுரஞ்சீர் 
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் 
கொச்சைவா னவர்தங்கோனூர் 
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை 
யுதைத்துகந்த வப்பனூரே.
2.073. 6
வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2262 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் 
கோனூர்வண் புகலியிஞ்சி 
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு 
சண்பைவியன் காழிகொச்சை 
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் 
 
தோணிபுரம் பூந்தராய்சீர்ப் 
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் 
 
பால்வண்ணன் பயிலுமூரே.
2.073. 7
வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2263 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் 
சிலம்பனூர் காழிமூதூர் 
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை 
வேணுபுரங் கமலநீடு 
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி 
தராய்தோணி புரங்கூடப்போர் 
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள் 
 
செற்றமலைச் சிலையனூரே.
2.073.8
போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2264 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன்றன்னூர் 
நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் 
தயனூர்சீர்த் தேவர்கோனூர் 
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி 
லாச்சண்பை காழிகொச்சை 
அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் 
தணர்வேத மறாதவூரே.
2.073.9
அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவு படாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2265 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் 
கொச்சையிந் திரனூர்மெய்மை 
நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் 
குருப்புகலி தராய்தூநீர்மேல் 
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் 
சிலம்பனூர் செருச்செய்தன்று 
மாலோடு மயனறியான் வண்காழி 
சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.
2.073.10
உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப் பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2266 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் 
கொச்சைகழு மலமன்பானூர் 
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் 
சிரபுரமொண் புறவநண்பார் 
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் 
புகலிவெங் குருவுமென்பர் 
சாக்கியரோ டமண்கையர் தாமறியா 
வகைநின்றான் றங்குமூரே.
2.073.11
சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 
2267 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் 
தோணிபுர மணிநீர்ப்பொய்கை 
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் 
புகழ்க்காழி சண்பைதொல்லூர் 
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் 
வேணுபுர மயனூர்மேலிச் 
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன 
தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.
2.073.12
புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.073.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2256 விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்  புகலிவெங் குருமேற்சோலை வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்  சிரபுரம்வண் புறவமண்மேல் களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென்றின்ன விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே.2.073. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 

2257 திருவளருங் கழுமலமே கொச்சை  தேவேந்திரனூர் அயனூர்தெய்வத் தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்  காழிதகு சண்பையொண்பா வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்  தோணிபுர முயர்ந்ததேவர் வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன் விரும்புமூரே.2.073. 2
பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும். 

2258 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்வாழூர் ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் காழியிறை கொச்சையம்பொன் வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர் அமரர்கோனூர் ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரனாளும் அமருமூரே.2.073.3
சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2259 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம்வான் சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதேவேந் திரனூர்சீர்ப் பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழிசண்பை பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவுமூரே.2.073.4
பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2260 தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை தயங்குபூமேல் விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர்வென்றித் திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச்  செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர் உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ முலகத்தி லுயர்ந்தவூரே.2.073.5
உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும். 

2261 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங் காழிசண்பை எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய் தோணிபுரஞ்சீர் வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் கொச்சைவா னவர்தங்கோனூர் அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை யுதைத்துகந்த வப்பனூரே.2.073. 6
வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2262 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண் புகலியிஞ்சி வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன் காழிகொச்சை கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்  தோணிபுரம் பூந்தராய்சீர்ப் பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்  பால்வண்ணன் பயிலுமூரே.2.073. 7
வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2263 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் காழிமூதூர் நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங் கமலநீடு கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி புரங்கூடப்போர் தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள்  செற்றமலைச் சிலையனூரே.2.073.8
போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2264 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்றன்னூர் நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் தயனூர்சீர்த் தேவர்கோனூர் வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை காழிகொச்சை அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாதவூரே.2.073.9
அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவு படாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2265 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந் திரனூர்மெய்மை நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி தராய்தூநீர்மேல் சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர் செருச்செய்தன்று மாலோடு மயனறியான் வண்காழி சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.2.073.10
உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப் பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2266 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன்பானூர் ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவநண்பார் பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவுமென்பர் சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் றங்குமூரே.2.073.11
சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும். 

2267 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுர மணிநீர்ப்பொய்கை புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி சண்பைதொல்லூர் மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுர மயனூர்மேலிச் சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.2.073.12
புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.