LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-74

2.074.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2268 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் 
குறைவிலாப் புகலிபூமேன் 
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் 
பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச் 
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை 
புகழ்ச்சண்பை காழிகொச்சை 
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் 
கழுமலநாங் கருதுமூரே.
2.074. 1
நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும். 
2269 கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் 
தோணிபுரங் கனகமாட 
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா 
யுலகாருங் கொச்சைகாழி 
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் 
செங்கமலத் தயனூர்தெய்வத் 
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை 
முடியண்ணல் தங்குமூரே.
2.074. 2
சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும். 
2270 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை 
 
யொளிமருவு காழிகொச்சை 
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் 
 
தோணிபுரங் கற்றோரேத்துஞ் 
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் 
 
புறவமய னூர்பூங்கற்பத் 
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் 
குருக்கங்கை தரித்தோனூரே.
2.074. 3
கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும். 
2271 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் 
தோணிபுரந் தரியாரிஞ்சி 
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் 
தராய்புகலி யிமையோர்கோனூர் 
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி 
சண்பைசெழு மறைகளெல்லாம் 
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ 
னூருலகில் விளங்குமூரே.
2.074. 4
உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும். 
2272 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை 
வேணுபுர மேகமேய்க்கும் 
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி 
யெழிற்புகலி புறவமேரார் 
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் 
சிரபுரம்வன் னஞ்சமுண்டு 
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா 
மன்னுடலங் காய்ந்தோனூரே.
2.074. 5
காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2273 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் 
கழுமலமாத் தோணிபுரஞ்சீர் 
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ 
ரிருங்கமலத் தயனூரின்பம் 
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் 
தராய்கொச்சை காழிசண்பை 
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் 
பகைகெடுத்தோன் றிகழுமூரே.
2.074. 6
முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130. ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும். 
2274 திகழ்மாட மலிசண்பை பூந்தராய் 
பிரமனூர் காழிதேசார் 
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் 
வயங்கொச்சை புறவம்விண்ணோர் 
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் 
குருவெம்போர் மகிடற்செற்று 
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் 
பணிந்துலகி னின்றவூரே.
2.074. 7
கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 
2275 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி 
புரநிகழும் வேணுமன்றில் 
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி 
சண்பைவளர் புறவமோடி 
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் 
தராய்புகலி தேவர்கோனூர் 
வென்றிமலி பிரமபுரம் பூதங்க 
டாங்காக்க மிக்கவூரே.
2.074. 8
பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 
2276 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற 
 
வஞ்சண்பை காழிகொச்சை 
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் 
 
பூந்தராய் சிலம்பன்சேரூர் 
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி 
 
வெங்குருவல் லரக்கன் றிண்டோள் 
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ 
டழித்துகந்த வெம்மானூரே.
2.074. 9
வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும். 
2277 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் 
கழுமலநற் புகலியென்றும் 
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் 
 
தரனூர்நற் றோணிபுரம் போர்க் 
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய 
னூர்தராய் சண்பைகாரின் 
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் 
விளங்கியவெம் மிறைவனூரே.
2.074. 10
மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 
2278 இறைவனமர் சண்பையெழிற் புறவமய 
னூரிமையோர்க் கதிபன்சேரூர் 
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி 
புரங்குணமார் பூந்தராய்நீர்ச் 
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் 
கொச்சைகழு மலந்தேசின்றிப் 
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் 
பரிசறியா வம்மானூரே.
2.074. 11
ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 
2279 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் 
குருக்கொச்சை புறவமஞ்சீர் 
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி 
தோணிபுரந் தேவர்கோனூர் 
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் 
வழிமுடக்கு மாவின்பாச்சல் 
தம்மானொன் றியஞான சம்பந்தன் 
றமிழ்கற்போர் தக்கோர்தாமே.
2.074. 12
அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர். 
திருச்சிற்றம்பலம்

2.074.திருப்பிரமபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2268 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன் மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச் சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.2.074. 1
நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும். 

2269 கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத் தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.2.074. 2
சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும். 

2270 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை  யொளிமருவு காழிகொச்சை கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்  தோணிபுரங் கற்றோரேத்துஞ் சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்  புறவமய னூர்பூங்கற்பத் தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே.2.074. 3
கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும். 

2271 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர் தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம் விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே.2.074. 4
உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும். 

2272 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும் இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார் வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.2.074. 5
காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.

2273 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர் ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம் வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.2.074. 6
முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130. ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும். 

2274 திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார் மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர் புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.2.074. 7
கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 

2275 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில் ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர் வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.2.074. 8
பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 

2276 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற  வஞ்சண்பை காழிகொச்சை தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்  பூந்தராய் சிலம்பன்சேரூர் மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி  வெங்குருவல் லரக்கன் றிண்டோள் ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.2.074. 9
வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும். 

2277 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும் பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்  தரனூர்நற் றோணிபுரம் போர்க் கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின் மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.2.074. 10
மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 

2278 இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர் குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச் சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப் பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.2.074. 11
ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும். 

2279 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர் மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர் அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல் தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.2.074. 12
அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.