LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-75

2.075.சீகாழி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2280 விண்ணியங்கு மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப் 
பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற் 
கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண் 
மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே. 2.075. 1
ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள், உலகம் நலம் பெற மறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன், விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக் கொண்ட நெற்றியன். 
2281 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் 
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான் 
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் 
நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே. 2.075. 2
வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன் உயிரைப் போக்கியவன்; உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும் கையினை உடையவன்: மேலானவன். 
2282 சுற்ற லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத் 
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் 
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண் 
மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே. 2.075. 3
கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப் பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன். 
2283 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை 
மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங் 
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட் 
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 2.075.4
கற்களையும் அசையச்செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்: பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட தோள்கள் அசைய நடனம் ஆடுபவன். 
2284 தூநயங்கொடிரு மேனியிற் பொடிப்பூசிப்போய் 
நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக் 
கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட் 
டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே. 2.075.5
மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்; நாநயம் பெற வேதங்களை அருளியவன். 
2285 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே 
மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன் 
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட் 
பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே. 2.075. 6
உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன். 
2286 முடியி லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ 
வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் 
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட் 
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 2.075.7
முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடை யினளாகிய பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான். 
2287 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி 
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் 
நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே 
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே. 2.075. 8
கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேத மொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான். 
2288 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் 
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் 
வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை 
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 2.075. 9
பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன், நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரியமுத்துக்கள், சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும். 
2289 நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர் 
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான் 
கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் 
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே. 2.075.10
கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில் வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன். 
2290 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் 
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் 
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் 
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 2.075.11
மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழாளர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.075.சீகாழி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2280 விண்ணியங்கு மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப் பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற் கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண் மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே. 2.075. 1
ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள், உலகம் நலம் பெற மறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன், விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக் கொண்ட நெற்றியன். 

2281 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான் கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே. 2.075. 2
வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன் உயிரைப் போக்கியவன்; உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும் கையினை உடையவன்: மேலானவன். 

2282 சுற்ற லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத் துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண் மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே. 2.075. 3
கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப் பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன். 

2283 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங் கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட் தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 2.075.4
கற்களையும் அசையச்செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்: பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட தோள்கள் அசைய நடனம் ஆடுபவன். 

2284 தூநயங்கொடிரு மேனியிற் பொடிப்பூசிப்போய் நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக் கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட் டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே. 2.075.5
மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்; நாநயம் பெற வேதங்களை அருளியவன். 

2285 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன் கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட் பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே. 2.075. 6
உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன். 

2286 முடியி லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட் கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 2.075.7
முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடை யினளாகிய பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான். 

2287 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே. 2.075. 8
கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேத மொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான். 

2288 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 2.075. 9
பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன், நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரியமுத்துக்கள், சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும். 

2289 நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர் அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான் கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே. 2.075.10
கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில் வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன். 

2290 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 2.075.11
மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழாளர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.