LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-59

5.059.திருமாற்பேறு 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர். 
தேவியார் - கருணைநாயகியம்மை. 
1662 பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே. 5.059.1
போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும்.
1663 ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே. 5.059.2
கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை.
1664 துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே. 5.059.3
தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும், ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி, அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம்.
1665 தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே. 5.059.4
தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது, கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக; உம் வினையாயின போகும்.
1666 வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. 5.059.5
கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும், இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர்.
1667 பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர் 
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே. 5.059.6
பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக; ஒளிகிளர்கின்றதும், வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற்பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும்.
1668 மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத் 
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே. 5.059.7
மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை.
1669 முன்ன வன்னுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே. 5.059.8
உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள்.
1670 வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே. 5.059.9
அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள்.
1671 கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் 
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே. 5.059.10
கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை.
திருச்சிற்றம்பலம்

5.059.திருமாற்பேறு 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மால்வணங்குமீசர். 

தேவியார் - கருணைநாயகியம்மை. 

1662 பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்

வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்

கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு

திருமாற் பேறு தொழவினை தேயுமே. 5.059.1

  போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும்.

1663 ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்

கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்

மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு

ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே. 5.059.2

  கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை.

  • 1664 துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
  • அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
  • மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
  • பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே. 5.059.3

  தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும், ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி, அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம்.

1665 தீதவை செய்து தீவினை வீழாதே

காதல் செய்து கருத்தினில் நின்றநன்

மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்

போது மின்வினை யாயின போகுமே. 5.059.4

  தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது, கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக; உம் வினையாயின போகும்.

1666 வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்

வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை

வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு

வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. 5.059.5

  கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும், இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர்.

1667 பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை

உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர் 

வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு

கண்டு கைதொழத் தீருங் கவலையே. 5.059.6

  பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக; ஒளிகிளர்கின்றதும், வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற்பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும்.

1668 மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத் 

தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்

வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு

தொழவ லார்தமக் கில்லை துயரமே. 5.059.7

  மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை.

1669 முன்ன வன்னுல குக்கு முழுமணிப்

பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்

மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்

அன்ன வரெமை யாளுடை யார்களே. 5.059.8

  உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள்.

1670 வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்

காடு நீடுகந் தாடிய கண்ணுதல்

மாட நீடுய ருந்திரு மாற்பேறு

பாடு வார்பெறு வார்பர லோகமே. 5.059.9

  அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள்.

1671 கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் 

தருக்கி னாலெடுத் தானைத் தகரவே

வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு

அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே. 5.059.10

  கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை.

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.