LOGO

வரலாற்றில் இன்று-[ 30 ஏப்ரல் 2024]

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட தினம்

1945ஆம் ஆண்டு இதே நாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரியாவில் 1899ஆம் ஆண்டு பிறந்த ஹிட்லர், பின்னர் ஜெர்மனிக்குச் சென்றார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப் போரில் பங்கேற்றார்.

போருக்குப் பிறகு நாஜிக் கட்சியைத் தொடங்கிய அவர், 1933ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சிலராகவும், 1934ஆம் ஆண்டு தலைவராகவும் ஆனார். முதல் உலகப் போருக்குப் பிறகு மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்த ஜெர்மனியை ராணுவ பலத்திலும், பொருளாதார ரீதியிலும் முன்னேறச் செய்தார்.

ஜெர்மானியர்களே ஆளப் பிறந்தவர்கள் என்றும், யூதர்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்தார். 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியா மற்றும் அப்போதைய செக்கோஸ்லோவேகியா ஆக்கிரமித்து ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் 1939ஆம் ஆண்டு போலந்தை ஆக்கிரமிக்க முயன்ற போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தன. இதைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் பிரிட்டன் கூட்டணி நாடுகளுக்கு இடையே இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்றது ஜெர்மனி ராணுவம். ஆனால் ரஷ்ய ஆக்கிரமிப்பு போரின் போக்கையே மாற்றியது. இப்போரில் தோல்வியடைந்து ஜெர்மனி ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. இறுதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குள் ரஷ்யாவின் செம்படைகள் புகுந்தன.

இதையடுத்து ஹிட்லர் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மறைவிடம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லருடன் அவரது காதலி இவா பிரவுனும் தற்கொலை செய்து கொண்டார்

சர்வதேச ஜாஸ் தினம்

ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத்  திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள்  1100  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள் 1100
133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்  133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்
  "இன்றைய சூழலில் மாணவச் செல்வங்களை உயர்த்தக் கூடியது திருக்குறளே" || திருக்குறள் முழக்கப் போட்டி
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 4
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 3