|
||||||||
இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த அந்தமான் தமிழ் மூதாட்டிக்குப் பத்ம விருது |
||||||||
குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவைச் சேர்ந்த இயற்கை விவசாயி காமாட்சி செல்லம்மாளும்(69)ஒருவர்.
தமிழரான இவர் தென்னை மற்றும் பனை மரங்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கும் முறைகளை உருவாக்கியுள்ளார். இவர் தெற்கு அந்தமானில் உள்ள ரங்கசாங்கில் 10 ஏக்கரில் இயற்கை விவசாயப் பண்ணையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார். அதில், கிராம்பு, இஞ்சி, அன்னாசி மற்றும் வாழை உள்ளிட்ட ஊடு பயிர்களையும் பயிரிட்டுள்ளார்.
இயற்கையான விவசாய முறையைப் பயன்படுத்திப் பயிர் செய்து வருகிறார். தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை அவர் பயன்படுத்துவதில்லை.இது போன்று இயற்கை விவசாயம் செய்யும்படி மற்ற விவசாயிகளையும் காமாட்சி செல்லம்மாள் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது வலியுறுத்தலால், 150-க்கும் மேற்பட்டோர் வழக்கமான விவசாய முறைகளை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறி உள்ளனர்.
வருடத்துக்கு 27 ஆயிரம் தேங்காய் சாகுபடி
விவசாயத்தில் புதுமையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். தென்னை சாகுபடியை எளிதாக்கி, குறைவான செலவிலான பயிர் முறைகளை உருவாக்கியுள்ளார்.தென்னை மரங்களுக்குத் தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் உட்பட விவசாயத்திற்கான ஆக்கப்பூர்வமான, செலவு குறைந்த தீர்வுகளைச் செயல்படுத்தியுள்ளார்.
அவருடைய தென்னை தோட்டத்தில் வருடத்துக்கு 27 ஆயிரம் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள செல்லம்மாளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. |
||||||||
by Kumar on 29 Jan 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|