அரசுசாரா அமைப்புக்களாகிய தொண்டு நிறுவனங்கள் இன்றைய சமூகத்தின் பார்வையில் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது. அதேவேளை, ஒட்டு மொத்தமாக ஒன்றை மதிப்பீடு செய்வதும் சரியான ஒன்றல்ல!
சில தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் தரமான சேவைகளைச் செய்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட பல தொண்டு நிறுவனங்களின் சேவைகள் வெளிச்சத்துக்கு வராமலும் போய்விடுகின்றன. எனவே அவற்றை எல்லாம் இனம் கண்டறிந்து உலகத் தமிழர்களின் பார்வைக்கும், நமது தளத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அரசு நிர்வாகத்துக்கும் இதைக்கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகவே இந்தப் பகுதி...
|