LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மண்எண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்தேன் பிரதமர் மன்மோகன்சிங் உருக்கம்

 

அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:- 
 
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஆண், பெண் என்ற வேறுபாடியின்றி கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்காதபடி பார்த்துக் கொள்வோம். மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் இந்த சட்டம் நிறை வேற்றப்படும். 
 
கல்வி அறிவை அனைவரும் பெற வேண்டும். கல்விக்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று நான் படித்தேன்.
 
நான் படித்த காலத்தில் எங்கள் வீட்டில் மின் விளக்கு வசதி கிடையாது. மண்எண்ணை விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தேன். நான் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு கல்வி தான் காரணம்.
 
எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் நல்ல கல்வியறிவு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல எதிர் கால வாழ்வுக்காக இந்தியர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும், அந்த கனவோடு வாழ வேண்டும்.
 
எல்லோரும் அடிப்படை கல்வியை கண்டிப்பாக பெற வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணகோகலே ஆசைப்பட்டார். அவரது ஆசை இன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் அனைவரும் உரிய முறையில் கட்டாயமாக கல்வியறிவு பெற்றால் எதிர்கால இந்தியா வலிமையாகவும், செழுமை நிறைந்ததாகவும் இருக்கும். இந்த லட்சியத்தை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
 
கட்டாய, இலவச கல்வித் திட்டம் வெற்றி பெற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் ஆசிரியர்கள் கொடுக்கும் உற்சாகம், திறமை காரணமாகத் தான் ஒவ்வொருவரும் வெற்றியாளராக முடிகிறது. எனவே ஆசிரியர்கள், இந்த கல்வி உரிமைச் சட்டத்தில் தங்களையும் ஒரு பங்குதாரர் போல இணைத்துக் கொள்ள வேண்டும்.
 
குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கும் கல்வியில் மிக முக்கியமானது. அவர்கள் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த சட்ட அமலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும், நமது நாட்டின் வளர்ச்சி கல்வி மேம்பாட்டில் தான் உள்ளது.
 
 
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.


     அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:- 

 

     இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஆண், பெண் என்ற வேறுபாடியின்றி கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்காதபடி பார்த்துக் கொள்வோம். மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் இந்த சட்டம் நிறை வேற்றப்படும்.  கல்வி அறிவை அனைவரும் பெற வேண்டும். கல்விக்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று நான் படித்தேன்.

 

 

     நான் படித்த காலத்தில் எங்கள் வீட்டில் மின் விளக்கு வசதி கிடையாது. மண்எண்ணை விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தேன். நான் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு கல்வி தான் காரணம். எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் நல்ல கல்வியறிவு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல எதிர் கால வாழ்வுக்காக இந்தியர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும், அந்த கனவோடு வாழ வேண்டும். எல்லோரும் அடிப்படை கல்வியை கண்டிப்பாக பெற வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணகோகலே ஆசைப்பட்டார். அவரது ஆசை இன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.

 

 

     இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் அனைவரும் உரிய முறையில் கட்டாயமாக கல்வியறிவு பெற்றால் எதிர்கால இந்தியா வலிமையாகவும், செழுமை நிறைந்ததாகவும் இருக்கும். இந்த லட்சியத்தை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 

     கட்டாய, இலவச கல்வித் திட்டம் வெற்றி பெற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் ஆசிரியர்கள் கொடுக்கும் உற்சாகம், திறமை காரணமாகத் தான் ஒவ்வொருவரும் வெற்றியாளராக முடிகிறது. எனவே ஆசிரியர்கள், இந்த கல்வி உரிமைச் சட்டத்தில் தங்களையும் ஒரு பங்குதாரர் போல இணைத்துக் கொள்ள வேண்டும்.

 

     குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கும் கல்வியில் மிக முக்கியமானது. அவர்கள் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த சட்ட அமலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும், நமது நாட்டின் வளர்ச்சி கல்வி மேம்பாட்டில் தான் உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

 

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.