|
|||||
கறிவேப்பிலை குழம்பு |
|||||
தேவையான பொருட்கள்: கறிப்பிலை - அரை கப் சின்னவெங்காயம் -2 மிளகு -ஒரு தேக்கரண்டி சீரகம் -ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு -ஒரு மேசைக்கரண்டி சிகப்பு மிளகாய் -4 பூண்டு - 2 பல் இஞ்சி- சிறுதுண்டு வெங்காய கறிவடகம் - ஒரு துண்டு பெருங்காயம் - சிறுதுண்டு கடுகு - தாளிக்க நல்லணெய் - ஒரு மேசைக்கரண்டி புளி - எலும்பிச்சையளவு உப்பு - தேவைக்கு செய்முறை : 1.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் . 2.புளியை தண்ணிரில் உறவைக்கவும் . 3.ஒரு பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,மிளகு,சீரகம்,சிவப்பு மிளகாய் ,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் . 4.பிறகு எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அதனுடன் புளி தண்ணீர் விடு அரைக்கவும் . 5.வெங்காய வடகம் ,பெருங்காயம் ,வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும் . 6.கடைசியில் தேவையான உப்பு சேர்க்கவும் .கறிவேப்பிலை குழம்பு ரெடி . |
|||||
by Swathi on 02 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|