அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி அல்லது மூவேந்தர் முன்னணிக் கழகம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி. முக்குலத்தோர் சாதியினரிடையே ஆதரவைப் பெற்றுள்ளது.
தோற்றம்:
இதன் நிறுவனர் மற்றும் தலைவர் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சேதுராமன். 1998ல் நிறுவப்பட்ட இக்கட்சி “மூவேந்தர் முன்னேற்ற முன்னணி”, ”மூவேந்தர் முன்னேற்றக் கழகம்”, ”மூவேந்தர் முன்னணிக் கழகம்” என பலவேறு பெயர்களால் அறியப்பட்டாலும், அதன் நிறுவனரின் பெயரால் “டாக்டர் சேதுராமன் கட்சி” என்று பரவலாக அடையாளப்படுத்தப்படுகிறது.
கட்சியின் கொள்கை:
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டங்களை தென் தமிழ் மாநிலம் என்ற பெயரில் தனி மாநிலமாக்க வேண்டுமென்பது இக்கட்சியின் கொள்கைகளுள் ஒன்று.
|