|
||||||||||||||||||
ஈசி மட்டன் ஃப்ரை(easy mutton fry) |
||||||||||||||||||
தேவையானவை : கறி – கால் கிலோ மஞ்சள்த்தூள் – ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டுவிழுது – ஒரு ஸ்பூன் தனியாத்தூள்- ஒரு ஸ்பூன் கரம் மசாலா- ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – இரண்டு ஸ்பூன் சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் உப்பு-கால் ஸ்பூன் தயிர் – மூன்று ஸ்பூன் செய்முறை : 1.முதலில் கால் கிலோ கறியை சுத்தமாக கழுவவும்.அதனுடன் மஞ்சள்த்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,தனியாத்தூள்,கரம் மசாலா,தயிர்,இஞ்சிபூண்டுவிழுது போட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும் 2.அனைத்தயும் ஒன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 வீசில் வரும் வரை குக்கரில் வைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கருவாப்பில்லை போட்டு வதக்கவும் பின்பு வேக வைத்த கறியை சேர்த்து மீண்டும் வதக்கவும் 3.தீயை மிதமாக வைத்து பொரியவிடவும் எண்னை கசிந்து வரும்போது சூடாக பரிமாறவும் |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|