|
||||||||||||||||||
ஈரல் வறுவல்(Goat Liver Fry) |
||||||||||||||||||
தேவையானவை: ஆட்டு ஈரல் - அரை கிலோ மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயம் - இரண்டு இஞ்சி மற்றும் பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு வர மிளகாய் - 4 மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: 1.நன்கு கழுவிய ஈரலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 200 மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். 2.அதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும். 3.வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, மலிப்பொடி பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 4.அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.இப்போது சுவையான ஈரல் வறுவல் ரெடி. |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|