|
||||||||||||||||||
ஆட்டுக்கறி வறுவல்(goat meat roast) |
||||||||||||||||||
தேவையானவை : கறி – ஒரு கிலோ பூண்டு – 50 கிராம் சீரகம் – ஒரு ஸ்பூன் மிளகு – ஒரு ஸ்பூன் பட்டை – 4 லவங்கம் – 3 மல்லித்தூள் – 1/2 ஸ்பூன் ஏலக்காய் – 3 கசகசா – ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன் சோம்பு – ஒரு ஸ்பூன் இஞ்சி – 50 கிராம் தேங்காய் – 1 கீற்று சின்ன வெங்காயம் – 1/2 கிலோ நாட்டுத் தக்காளி – 1/4 கிலோ பிரியாணி இலை – 2 எண்ணெய் – 100 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.முதலில் குக்கரில் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். 2.கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், வதக்கிய தக்காளி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். 3.பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு மீண்டும் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 4.தண்ணீழ் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து சுருள வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும். |
||||||||||||||||||
by Swathi on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|