|
||||||||||||||||||
கறி வறுவல்(meat roast) |
||||||||||||||||||
தேவையானவை: கறி – ஒரு கிலோ மிளகு – ஒரு ஸ்பூன் பட்டை – 4 சீரகம் – ஒரு ஸ்பூன் லவங்கம் – மூன்று ஏலக்காய் – மூன்று நாட்டுத் தக்காளி – கால் கிலோ பிரியாணி இலை – இரண்டு எண்ணெய் – 100 கிராம் பூண்டு – 50 கிராம் தேங்காய் – ஒரு கீற்று சின்ன வெங்காயம் – கால் கிலோ உப்பு – தேவையான அளவு இஞ்சி – 50 கிராம் கசகசா – ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் – மூன்று ஸ்பூன் மல்லித்தூள் – கால் ஸ்பூன் சோம்பு – ஒரு ஸ்பூன் செய்முறை: 1.குக்கரில் கறியைப் போட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 2.பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு தேவையானால் மீண்டும் உப்பு சேர்த்துக் கலந்து விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து நன்றாக வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கவேண்டும் பிறகு கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|