வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனும், ஸ்ரீ திவ்யாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் காக்கி சட்டை.
எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 12-ந் தேதி நடக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஷங்கரின் பிரமாண்ட இயக்கமான 'ஐ', விஷாலின் 'ஆம்பள',அஜீத்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளிவர காத்திருக்கின்றன. இப்போது அவர்களுடன் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை படமும் போட்டி போட தயாராகி வருகிறதாம்.
|