74 இசையாசிரியர் பணி நியமனம்
அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த 74 காலியிடங்களுக்கு, இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இசைஆசிரியர்களுக்கு, விருப்ப இட மாறுதல் கவுன்சிலிங் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட்டது. 'ஆன்லைன்' வழியே, காலியிடங்கள் கண்டறியப்பட்டு, விருப்பமான ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது. பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 74 இசை ஆசிரியர்களுக்கு, எந்தக் கையூட்டும் இல்லாமல் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நியமனம், கவுன்சிலிங் வழியாக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். நேர்மையாக இந்தப் பணியிடங்களைத் தமிழிசையை அரசுப்பள்ளிகளில் சொல்லிக்கொடுக்க நியமித்தக் கல்வித்துறையின் செயல்பாட்டைப் பலரும் பாராட்டுகிறார்கள்.
|